புதிய வரவுகள் »

புதன், 31 ஜூலை, 2013

ஃபோட்டோ ஸ்கேப் 3.65 (புதியது)

   போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான இன்னொரு மென் பொருளைச் சொல்வது கடினம். ஆனால், போட்டோஷாப்புக்கு ஓரளவு மாற்றாக பயன்படுத்தப்படும் இலவச மென்பொருள் ஃபோட்டோஸ்கேப் ஆகும்.
    இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி ஃபோட்டோ ஸ்கேப் 3.65 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஃபோட்டோஷாப் போல பிம்பங்களை வண்ணம் மாற்றலாம். வண்ணப் பிம்பத்தை சாம்பல் (கிரே) நிறத்திற்கு மாற்றலாம். பல்வேறு ஃபில்டர் களையும் எஃபக்ட்களையும் பயன் படுத்தி, பிம்பங்களை மெருகேற்றலாம்.

பல்லடுக்கு பிம்பங்களை (மல்டிபிள் ஃபோட்டோஸ்) இணைத்து சிறிய அனிமேட்டட் காட்சிகளை உருவாக்கலாம். எளிதாகவும் வேடிக்கையாகவும் பிம்பங்களை மெருகேற்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. 21 எம்.பி கொள்ளவு கொண்ட ஃபோட்டோஸ்கேப்பை பழைய பென்டியம் கணினிகளில் கூட விரைவாக இயங்குகிறது என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
தரவிறக்கம் செய்ய  இந்த தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

செவ்வாய், 30 ஜூலை, 2013

ஃப்ரிமேக் வீடியோ கன்வெர்ட்டர்

   இந்த ஆண்டில் பல்வேறு புகழ்பெற்ற மென்பொருட்களின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஃப்ரிமேக் வீடியோ கன்வெர்ட்டர் 4.0.2.9 படகோப்புகளை தொகுக்க, வெட்ட, ஒட்ட, நூற்றுக்கணக்கான வடிவங்களில் மாற்ற (கன்வெர்ட்) இந்த மென்பொருளை மின்னல் வேகத்தில் செயல்படுத்தலாம். விண்டோஸ் பதிப்புகளில் எல்லா இயங்குதளங்களிலும் பயன்படுத்தும் வசதியுடன் வெளிவந்துள்ளது.
      முற்றிலும் இலவசமாக ஏவிஐ, எம்பி4, 3ஜிபி, எஃப்எல்வி, முவ், எம்பி3, வேவ், முதலிய 200க்கும் மேற்பட்ட ஒலி, ஒளி வடிவங்களை இன்புட்டாக ஏற்றுக்கொள்கிறது. புதியவர்களுக்கும் எளிதாக படக்கோப்புகளை தொகுக்க பழகிக்கொள்ளலாம். முக்கியமாக 20-40 மணிநேர படக்கோப்புகளை உருவாக்கி ஒரே டிவியில் (சிங்கிள் லேயர் & டுயல் லேயர்) பதிந்து தருகிறது.
        அவுட்புட்டாக புளுரே / டிவிடி ப்ளேயர், கணினி, அலைப்பேசி என பல்வேறு கருவிகளுக்கும் ஏற்றதாக மாற்றிக் கொள்ளலாம். படத்தின் அகலத்தை 4:3 அல்லது 16:9 எனவும் மாற்றிக்கொள்ளலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

பழுதான கோப்புகளை முழுதாக்கித் தரும் ஃபைல் ரிப்பேர்! (கோப்பு பழுது நீக்கி)

       நாம் கணினியில் சேமித்துவைத்து இருக்கும் ஃபைல்கள் (கோப்புகள்) சில எதிர்பாராமல் கரப்ட் (பழுது) ஆகிவிடும். இதனால் அந்த ஃபைலில் உள்ள தகவல்கள் அத்தனையையும் நாம் இழக்க நேரிடலாம். ஃபைல்கள் பழுது ஆக வைரஸ்கள் காரணமாக இருக்கலாம். திடீர் மின் தடை, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவும் ஃபைல்கள் கரப்ட் ஆகின்றன. இப்படி பழுது ஆன ஃபைல்களை சீர்படுத்தித் தருகின்றது. பைல் ரிப்பேர் (File Repair) என்ற மென்பொருள் இணையத்தில் இந்த பெயரை அடித்து தேடினாலே கிடைக்கும். அல்லது இங்கே சொடுக்கவும்.
       ஃபைல் ரிப்பேர் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த மென்பொருளை திறந்து அதில் பழுதான உங்கள் ஃபைலை தேர்வு செய்து கொள்ளுங்கள் இப்போது ஸ்டார்ட் ரிப்பேர் என்ற பொத்தானை அழுத்தினால் போதும் உங்கள் ஃபைல் பழுது நீக்கத் தொடங்கும்.
சிறிது நேரத்தில் உங்கள் பைல் சரி செய்யப்பட்டு உங்களுக்கு கிடைக்கும்.

செவ்வாய், 23 ஜூலை, 2013

RAM மெமரியை கிளீன் செய்து வேகத்தை அதிகரிப்பது எப்படி?

இந்த வியம் சிலருக்கு பழைய வியமாக இருக்கலாம் ஆனால் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம் அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்
அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று பார்ப்போம்
01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.
02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.
FreeMem=Space(128000000)
03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.
04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.
05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன் செய்துவிட்டோம்...

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்