ஜிமெயில் இலவசமாக இருப்பதனால் மட்டுமின்றி, அதன் அளவற்ற ஸ்டோரேஜ் இடம்,
கூடுதல் வசதிகள், இணைந்த அதிவேக தேடல் வசதி, இதனால் கிடைக்கும் மற்ற கூகுள்
தள வசதிகள் ஆகியவற்றால், இணையம் பயன்படுத்தும் அனை வரும் ஜிமெயில்
அக்கவுண்ட் வைத்துள்ளனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் களை
வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுகிறது. சில
பிரவுசர்கள், ஒரு நேரத்தில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை மட்டுமே திறக்க
அனுமதிக்கின்றன.
எடுத்துக் காட்டாக, நான் பயர்பாக்ஸ் பிரவுசரில், முதலில்
ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்து, பின்னர், இன்னொரு டேப்பில்
அடுத்த ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தேன். என்னைக் கேட்காமலேயே, முதல்
அக்கவுண்ட் முடித்துவைக்கப்பட்டது. இது ஏன் என ஆங்காங்கே சென்று
பார்த்தபோது, அது அப்படித்தான் என்பது போல செய்தி கிடைத்தது. ஆனால் இன்னொரு
வழியை இங்கு கையாண்டேன். இன்னொரு முறை பயர்பாக்ஸ் பிரவுசர் ஐகானில் கிளிக்
செய்து, இரண்டாவதாகவும் இந்த பிரவுசரில், ஜிமெயில் தளம் திறந்து, இன்னொரு
அக்கவுண்ட்டைத் திறந்தேன். இரண்டும் இயங்கியது. மூடப்படவில்லை.
ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பிரவுசரில் இதற்கு வேறு ஒரு வழி கிடைத்தது. அதன் படி, முதலில் இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளவும். ஜிமெயில் தளம் செல்லவும். அங்கு “Remember Me” என்ற ஆப்ஷன் இயக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். இதன் பின்னர், முதல் அக்கவுண்ட்டினை சைன் இன் (Sign In) செய்து திறக்கவும். அடுத்து, ஆல்ட்+ எப்+ஐ அழுத்தவும். பின்னர் என்டர் தட்டவும். இதனால், இன்னொரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கம் (Session) ஒன்று திறக்கப்படும். இங்கு மீண்டும் ஜிமெயில் தளம் சென்று, “Remember Me” என்ற ஆப்ஷன் இயக்கப்படாமல், அடுத்த அக்கவுண்ட்டினை சைன் இன் செய்திடவும். இதே போல ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறக்க அனுமதிக்காத, வெப் மெயில்கள் அனைத்தையும் இந்த முறையில் திறந்து பயன்படுத்தலாம்.