புதிய வரவுகள் »

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க

ஜிமெயில் இலவசமாக இருப்பதனால் மட்டுமின்றி, அதன் அளவற்ற ஸ்டோரேஜ் இடம், கூடுதல் வசதிகள், இணைந்த அதிவேக தேடல் வசதி, இதனால் கிடைக்கும் மற்ற கூகுள் தள வசதிகள் ஆகியவற்றால், இணையம் பயன்படுத்தும் அனை வரும் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் களை வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுகிறது. சில பிரவுசர்கள், ஒரு நேரத்தில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை மட்டுமே திறக்க அனுமதிக்கின்றன.
எடுத்துக் காட்டாக, நான் பயர்பாக்ஸ் பிரவுசரில், முதலில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்து, பின்னர், இன்னொரு டேப்பில் அடுத்த ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தேன். என்னைக் கேட்காமலேயே, முதல் அக்கவுண்ட் முடித்துவைக்கப்பட்டது. இது ஏன் என ஆங்காங்கே சென்று பார்த்தபோது, அது அப்படித்தான் என்பது போல செய்தி கிடைத்தது. ஆனால் இன்னொரு வழியை இங்கு கையாண்டேன். இன்னொரு முறை பயர்பாக்ஸ் பிரவுசர் ஐகானில் கிளிக் செய்து, இரண்டாவதாகவும் இந்த பிரவுசரில், ஜிமெயில் தளம் திறந்து, இன்னொரு அக்கவுண்ட்டைத் திறந்தேன். இரண்டும் இயங்கியது. மூடப்படவில்லை.
         ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பிரவுசரில் இதற்கு வேறு ஒரு வழி கிடைத்தது. அதன் படி, முதலில் இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளவும். ஜிமெயில் தளம் செல்லவும். அங்கு “Remember Me” என்ற ஆப்ஷன் இயக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். இதன் பின்னர், முதல் அக்கவுண்ட்டினை சைன் இன் (Sign In) செய்து திறக்கவும். அடுத்து, ஆல்ட்+ எப்+ஐ அழுத்தவும். பின்னர் என்டர் தட்டவும். இதனால், இன்னொரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கம் (Session) ஒன்று திறக்கப்படும். இங்கு மீண்டும் ஜிமெயில் தளம் சென்று, “Remember Me” என்ற ஆப்ஷன் இயக்கப்படாமல், அடுத்த அக்கவுண்ட்டினை சைன் இன் செய்திடவும். இதே போல ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறக்க அனுமதிக்காத, வெப் மெயில்கள் அனைத்தையும் இந்த முறையில் திறந்து பயன்படுத்தலாம்.

கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்


நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.predator-usb.com/predator/en/index.php என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.

கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.

Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்.

      சில நேரங்களில் நாம் ஒரு நீண்ட word Document ஐ டைப் செய்து முடித்த பின் பார்த்தால் அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தேவை இல்லாத Capital லெட்டர்கள் வந்து இருக்கும். தெரியாமல் அழுத்தி இருப்போம். இதை எப்படி கலைவது? வாருங்கள் பார்ப்போம்.

முதலில் Start--> control Panel செல்லுங்கள்.

நீங்கள் XP use செய்தால், Accessibility என்பதை கிளிக் செய்யவும். பின்னர் keyboard ஐ தெரிவு செய்யவும்.

Win 7 க்கு Ease of access--> Change How your key works ஐ கிளிக் செய்யவும்.

இப்போது "Turn on Toggle Keys " என்பதை Mark செய்து விடவும். அவ்ளோதான் இப்போது caps lock key அழுத்தினால் ஒரு சவுண்ட் வருவதை கவனிக்கவும்.

சரி பிரவுசிங் சென்டர் அல்லது ஸ்பீக்கர் இல்லாத இடங்களில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்டால் அதற்க்கும் வழி உள்ளது. ஆனால் இதில் நீங்கள் தவறு செய்த பின் மட்டுமே திருத்த முடியும்.

அதாவது Shift+F3. இதை MS word இல் மாற்ற வேண்டிய வார்த்தைக்கு நடுவே வைத்து press செய்து word ஐ உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளவும். இதில் ஒரு வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்