லாங் எக்ஸ்போஷர் படங்களை எடுக்க கற்றுக்கொள்ளும் முன்னர் லாங்
எக்ஸ்போஷரினால் என்ன நடக்கும் என தெரிந்தால் எளிதாக இருக்கும். நீண்ட நேரம்
நாம் லென்ஸினை திறந்து வைத்திருந்தால் , எவ்வளவு நேரம் நாம் திறந்து
வைத்திருக்கின்றோமோ அத்தனை நேரம் லென்சில் விழும் ஒளிகள் படத்தில்
பதிவாகும். ஒரு காலைப்பொழுதில் இதை முயற்சித்தால் வெள்ளை படமே நமக்கு
மிஞ்சும்.
ஒரு சாதாரண லாங் எக்ஸ்போஷர் படம்
1.
தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் மேலிருந்து எடுக்கப்பட்ட படம். அதில் வால்
போல நீளமாக இருக்கும் ஒளி வாகனங்களின் ஒளி. நீண்ட நேரம் எக்ஸ்போஸ்
செய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் பதிவான ஒளிகள் அனைத்தும் படத்தில் பதிவாகி
இருக்கின்றது.
ஒரு தீபாவளி நாளொன்றில் தங்கைகள் மூவர் மத்தாப்பு
கொளுத்திக்கொண்டிருந்தனர். இந்த லாங் எக்ஸ்போஷரை வைத்து பரிச்சிக்கலாம் என
ஆரம்பித்தது அன்று இரவு முழுவது பரிச்சித்தோம். முதலில் ஸ்டார்கள், பின்னர்
ஒரு எழுத்து, பின்னர் பெயர். எளிய பெயர்கள், ஆங்கிலம், தமிழ் என கலந்து
அடித்தோம். எழுத்தை எழுதுவதில் சிக்கல் என்னவெனில் கண்ணாடி எழுத்தாக எழுத
வேண்டும், எழுதுபவர் கேமராவிற்கு எதிரில் இருப்பதால் ரிவர்சில் எழுத
வேண்டும். எடுத்துக்காட்டாக “C” எழுத வேண்டுமெனில் “)” என காற்றில் எழுத
வேண்டி இருக்கும்.
மத்தாப்பு, ஜாட்டி அல்லது டார்ச் லைட்டுகளை பயன்படுத்ததலாம். மற்றவை உங்கள் கைகளில் தான் இருக்கு.
Exposure : 10- 20 secs – Depending on the type of work
F – 5.6 0r more depending on light soure
Tripod must (இதில் இருக்கும் ஒரு படமும் முக்காலி உதவியுடன்
எடுக்கப்படவில்லை. ஆனால் அது அவசியம். கைகள் நடுங்கலாம். அல்லது திட்டுகளை
பயன்படுத்தலாம்)
ISO – குறைவாக வைத்தால் நல்ல படங்கள் கிடைக்கும்.
2. Sparkling Star
3. Running Letter uma.
4. ரம்யாவிற்கு மவின் மேல் புள்ளி வைப்பதில் சிரமம் இருந்தது. தெருவிளக்கும் உதவியது
5. உமா.
6. CGI – என் புதிய கம்பெனி. இதை 30 செகண்டு எக்ஸ்போஷரில் தனி ஆளாக எழுதினேன்.
7. இது 10 செகண்டு எக்ஸ்போஷர். குழலி சுவற்றில் ஒளி ஓவியம் வரைகின்றாள். டிரிப்பிள் ஆக்ஷன்
8. சில ஒலியில் சொல்வார்கள், நான் ஒளியில் சொல்கிறேன்.
9. வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வாணவேடிக்கை
நடந்துக்கொண்டிருந்தது. 300 எம்.எம் லென்ஸ் வழியாக விழுந்த ஒரு
வாணவேடிக்கை. கேமராவிற்கு மெல்லிய ஜெர்க் கொடுத்தேன். அழகிய உருவம்
கிடைத்தது.
- விழியன்
மேலும் கேள்விகளுக்கு umanaths@gmail.com ஐ தொடர்புகொள்ளவும்.
நன்றி நண்பரே......