நாம் கணினியில் சேமித்துவைத்து இருக்கும் ஃபைல்கள் (கோப்புகள்) சில எதிர்பாராமல் கரப்ட் (பழுது) ஆகிவிடும். இதனால் அந்த ஃபைலில் உள்ள தகவல்கள் அத்தனையையும் நாம் இழக்க நேரிடலாம். ஃபைல்கள் பழுது ஆக வைரஸ்கள் காரணமாக இருக்கலாம். திடீர் மின் தடை, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவும் ஃபைல்கள் கரப்ட் ஆகின்றன. இப்படி பழுது ஆன ஃபைல்களை சீர்படுத்தித் தருகின்றது. பைல் ரிப்பேர் (File Repair) என்ற மென்பொருள் இணையத்தில் இந்த பெயரை அடித்து தேடினாலே கிடைக்கும். அல்லது இங்கே சொடுக்கவும்.
ஃபைல் ரிப்பேர் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த மென்பொருளை திறந்து அதில் பழுதான உங்கள் ஃபைலை தேர்வு செய்து கொள்ளுங்கள் இப்போது ஸ்டார்ட் ரிப்பேர் என்ற பொத்தானை அழுத்தினால் போதும் உங்கள் ஃபைல் பழுது நீக்கத் தொடங்கும்.
சிறிது நேரத்தில் உங்கள் பைல் சரி செய்யப்பட்டு உங்களுக்கு கிடைக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக