
முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். இங்கு டாஷ்போர்டில் பக்க இறுதியில் உள்ள Tool and Resources பெட்டியில் உள்ள Webmaster Tool -ஐ க்ளிக்க செய்யுங்கள்.
கேட்கும் போது Webmaster Tool எனேபிள் செய்து கொள்ளுங்கள். உள்ளே சென்ற பிறகு Add a site பொத்தானை அழுத்துங்கள்.
இங்கு உங்கள் பிளாக் முகவரியைக் கொடுக்கவும். (http://www.thamizhdigital.blogspot.com/) இறுதியில் ஒரு "/" கொடுக்க மறவாதீர்கள். Verify செய்யச் சொல்லி வரும் வழிமுறையை செய்துவிடுங்கள். பின்னர் Sitemaps பகுதியில் உள்ள Submit a Sitemab லிங்க்கைக் கிளிக் செய்து, அங்குள்ள பெட்டியில் கீழே உள்ள கோட்-ஐ பேஸ்ட் செய்யுங்கள்.
atom.xml?redirect=false&start-index=1&max-results=100
ஒருவேளை உங்கள் பிளாக்கில் 200-க்கும் மேற்பட்ட இடுகைகள் இருந்தால் 100 என்பதை 400 அல்லது 500 என மாற்றிக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கருக்கான சைட் மேப் கூகிள் தளத்தில் இணைக்கப்பட்டுவிடும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக