நீங்கள் உங்கள் மொபைல் போனை விற்பதாக இருந்தால் முதலில் உங்கள் மெமரி கார்டை ஒருமுறைக்கு நான்கு முறை பார்மெட் செய்து விட்டு கொடுங்கள். அதுபோல் உங்கள் மொபைலையும் பாக்டரி ரீசெட் செய்து விட்டு கொடுங்கள் ஏன் என்றால் ஒரு முறை என் நண்பன் தன்னுடைய மொபைல் சரியாக வேலை செய்யவில்லை என்று ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்துள்ளான். அவர்கள் அந்த மொபைலில் உள்ள படங்கள் வீடியோக்கள் போன்றவைகளை காப்பி செய்து கொண்டு விட்டு கொடுத்துள்ளார்கள் இது தெரியவில்லை நம் நண்பருக்கு. சில நாட்களுக்கு முன் நான் இணையத்தில் உலாவிய போது ஒரு தளத்தில் அந்த நண்பரின் மனைவியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. நான் அதிர்ந்து போய் அவனிடம் கேட்டேன் அவனிடம் யாரிடமாவது மொபைலை அநாவசியமாக கொடுத்தாயா என்று இல்லை தன் மொபைல் சர்வீஸ் சென்டரில் மட்டும் கொடுத்து சர்வீஸ் செய்தேன் என்றான். நான் பின்னர் மேற்கூறியவாறு செய்த பிறகு விற்குமாறு கூறினேன். இவ்வாறு உங்கள் மொபைலை சர்வீஸ் செய்வீர்களானால் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை உங்கள் கணனிக்கு மாற்றி விட்டு மொபைலில் அழித்து விட்டு பின்னர் கொடுங்கள்.
அது போல் உங்கள் கணனியை யாருக்காவது விற்பதாக இருந்தால் உங்கள் கணணியில் உள்ள ஹார்ட் டிஸ்கினை ஒன்றுக்கு நான்கு முறை பார்மெட் செய்து விட்டு கொடுங்கள். அல்லது இந்த மென்பொருள் மூலம் பார்மெட் செய்து விட்டு கொடுங்கள்
சுட்டி
உங்கள் மொபைலில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற நிறுவன சிம்கார்டு உபயோகிப்பவர்கள் தேவையில்லாத வரும் விளம்பர அழைப்புகளை மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர்ப்பதற்கு உங்கள் மொபைலில் இருந்து START DND என்று மெஸேஜ் டைப் செய்து 1909 என்ற் எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகள் எஸ்எம்எஸ்கள் நிறுத்தப்படும்.
அல்லது
வோடாபோன் உபயோகிப்பவர்கள் இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்கள் மொபைல் எண் போன்றவை கொடுத்தால் தேவையில்லாத அழைப்புகள் எஸ்எம்எஸ் நிறுத்தப்படும்
சுட்டிஏர்டெல் உபயோகிப்பவர்கள் பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு உபயோகிப்பவர்களுக்கான
சுட்டி ஏர்டெல் லேண்ட்லை உபயோகிப்பவர்களுக்கான
சுட்டி