புதிய வரவுகள் »

எம்எஸ் ஆபிஸ் டிப்ஸ் ms office tips and tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்எஸ் ஆபிஸ் டிப்ஸ் ms office tips and tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வேர்டு 2010 ல் வாட்டர் மார்க் வசதியை பயன்படுத்துவது எப்படி?

கணினியை அதிகம் கையாளும் பலருக்கும் வேர்டு, எக்சல் உள்ளிட்டவற்றை கையாளுவது எளிதுதான். அடிப்படை கணினி கல்வியிலேயே இதன் பயன் பாடுகள் கற்றுத்தரப்பட்டாலும் கூட முழுமையாக அனைத்தையும் பயன்படுத்தும் அளவிற்கான தேவைகள் எழவில்லை.
வேர்டில் வாட்டர் மார்க் வசதியை பயன்படுத்துவது மிகவும் எளிதான ஒன்றுதான். இதற்கென வேர்டில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள டெம்ப்ளேட்டுகளை நீங்களே உரு வாக்கிக்கொள்ளவும் மடியும்.
இந்த வசதியை பயன்படுத்த நீங்கள் வழக்கம்போல் இன்சர்ட் மெனுவிற்கு செல்லக் கூடாது. வேர்டு 2010 ல் பேஜ் லேஅவுட் மெனுவில் இதற்கான வசதிகள் உள்ளன. பேஜ் லேஅவுட் மெனுவிற்கு சென்று வாட்டர்மார்க் என்பதை கிளிக் செய்தால் எண்ணற்ற வசதிகளைக் காணலாம்.
பொதுவாக அதிகம் பயன்படும் வாட்டர்மார்க்குகளான Confidential, DO NOT COPY, DRAFT, SAMPLE, ASAP மற்றும் URGENT ஆகியவைகள் முன்வடிவங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்று தேவைப்பட்டால் அதனை கிளிக் செய்தால் போதும். இது தவிர தனிப்பட்ட விதத்தில் வாட்டர் மார்க் தேவையுள்ளவர்கள் CUSTOM WATERMARK வசதியை பயன் படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.
இதிலும் எழுத்து வடிவிலான வாட்டர் மார்க் பயன்படுத்தலாம் , அல்லது ஏற்கனவே ஃபோட்டோஷாப் போன்ற அப்ளிகேஷன் மூலம் ஏதாவது படங்களை வாட்டர் மார்க்கிற்க்காக உருவாக்கியிருந்தாலும் அதனையும் பயன் படுத்திக் கொள்ளலாம். இது தவிர ஆபிஸ்.காம் இணைய தளத்தில் காணப்படும் பல வகையான வாட்டர் மார்க் முன்வடிவங்களில் ஏதாவதுதொன்றை பயன்படுத்த விரும்பினால் அதற்கான வசதியையும் கொடுக்கப்பட்டுள்ளது.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்