புதிய வரவுகள் »

புதன், 14 செப்டம்பர், 2011

பீடிஎஃப் ஃபைலை பிரிக்க, இணைக்க... PDF Splitter Merger

இன்றைய கணினி பயன்பாட்டாளர்கள் பீடிஎஃப் ஃபைல்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. சில பீடிஎஃப் ஃபைல்களில் சில பக்கங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். அதுபோல சில பக்கங்களை நீக்க வேண்டி இருக்கும். சில பீடிஎஃப் ஃபைல்களை ஒன்று சேர்த்து ஒரே பீடிஎஃப் ஃபைலாக மாற்ற வேண்டி இருக்கும். இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்க்கில் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.இதில் ADD பட்டனை கிளிக் செய்தோ டிராப் செய்தோ பீடிஎஃப் ஃபைல்களை கொண்டு வரலாம். இதில் குறிப்பிட்ட பக்கத்தை நீக்க, சேர்க்க, பிரிக்க என பல வசதிகள் உள்ளது. நீங்கள் பக்க எண் மட்டும் கொடுத்தால் போதுமானது.
ஒற்றை பக்க எண்களிலோ, இரட்டை பக்க எண்களிலோ எதை வேண்டுமானாலும் நீக்கவோ, சேர்க்கவோ, பிரிக்கவோ செய்யலாம். இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பீடிஎஃப் ஃபைல்களை ஒரே ஃபைலாக மாற்றி விடலாம். நீங்கள் பக்க வரிசைப்படி பிரித்து விடலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறு செய்து பின்னர் கீழே உள்ள டேக் ஆப்ஷன் கிளிக் செய்தால் போதுமானது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பயாஸ் BIOS - Basic Input Output System

கணினி பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டோ போகிறது. பலரும் கணினியில் பயாஸ் என்ற வார்த்தையை கேள்வி பட்டிருப்பதோடு சரி பயாஸ் என்றால் என்ன என்று தெரியாது.
பயாஸ் BIOS - Basic Input Output System
இது அனைத்து கணினிகளின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்டு டிஸ்க் மற்றும் கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கணினிக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஸ்கிரீன், ஹார்டு டிஸ்க் மற்றும் கீ போர்டு போன்ற தேவையான சாதனங்கள் அனைத்தும் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை தேடிப்பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லையென்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

தற்காலிக ஃபைல்களை தானே டெலிட் ஆக... Automatically Delete Temp Files 7.0

நமது கணினியில் அடிக்கடி சேரும் தற்காலிக (டெம்ப்ரவரி) ஃபைல்களை உடனுக்குடன் நீக்கி விட்டால் நமது கணினி வேகமாக செயல் படும். அதற்க்கான மென்பொருல்தான் இந்த ஆட்டோமெட்டிக் டெலிட் டெம்ப்ரவரி பைல். இதனை தரவிரக்கம் செய்து கணினியில் நிறுவியதும் விண்டோ திறக்கும். இதில் உங்கள் டெம்ப்ரவரி ஃபைல்களை ஒரு மணிநேரம் முதல் ஒரு வாரம் வரை நேரத்தை செட் செய்து விட்டால் நமது கணினியில் சேரும் டெம்ப்ரவரி ஃபைல்களை ரீ சைக்கிள் பின்னில் உள்ள ஃபைல்கள் என அனைத்தையும் அதுவே டெலிட் செய்துவிடும். உங்கள் தேவைக்கு ஏற்ப நேரத்தை செட் செய்துவிட்டால் போதும். இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

TrIDNet - File Identifier பைல் ஐடின்டிஃபையர்

பைல் ஐடின்டிஃபையர் மென்பொருள் நமது கணினியில் உள்ள கோப்புகளின் ஃபார்மெட்டை தெரிந்துகொள்ளும் மென்பொருள். நாம் வைத்துள்ள ஃபார்மெட் தெரியாத பைல்களின் ஃபார்மெட்டை தெறிந்துகொள்ளவும் அந்த பைலை எந்த மென்பொருளின் உதவியுடன் திறக்கமுடியும் என்ற விபரத்தையும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளை பற்றி தெரிந்துகொள்ளவும் தரவிறக்கம் செய்யவும் இங்கே சொடுக்கவும்.

திங்கள், 5 செப்டம்பர், 2011

கோட்டோவியம் வரைய அவுட் லைனர்

கணிப்போர்ரியில் நாம் நிறுவியுள்ள கோரல்டிரா மற்றும் ஸ்ட்ரீம்லைன் என்னும் மென்பொருளை கொண்டு நமது தேவைக்கேற்ப கோட்டோவியங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.ஆனால் புதியதாக அவுட்லைனர் என்னும் சிறிய பிளக்இன் கொண்டு போட்டோ ஷாப்பில் கூட கோட்டோவியங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
அவுட்லைனர் பிளக்கினை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும், பிறகு கணிப்பொறியை அணைத்துவிட்டு மீண்டும் துவங்குங்கள். இவ்வாறு செய்தவுடன் நாம் கணினியில் நிறுவியுள்ள அவுட்லைனர் பிளாக்இன் ஃபோட்டோஷாப் பில்டர் கேலரியில் அமர்ந்துகொள்ளும். அதாவது இமேஜ் ஸ்கில் என்னும் போல்டரை திறந்தால் அதன் உள்ளே அவுட் லைனர் என்னும் பெயரில நாம் நிறுவியுள்ள பிளாக்கின் இருப்பதை காணமுடியும்.நாம் அவுட்லைனாக மாற்ற விரும்பும் ஒளிப்படத்தை திறந்து கொண்டு இமேஜ் ஸ்கிள் பிளாக்கினை அப்ளை செய்யுங்கள் அடுத்த நொடியே நாம் திறந்துள்ள ஒளிப்படம் அவுட்லைனா மாறியிருப்பதை காணலாம். மேலும் இதில் காணப்படுகின்ற டீஃபால்ட் என்னும் ஆப்ஷனைத் தவிர மற்ற ஆப்ஷன்களை கொடுத்தால் அவை படத்தின் பின்புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதைக் காணலாம். இரண்டு எம்பிக்கும் மிக குறைவாக இருக்கும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Plug-in’s installer automatically detects the following graphic host applications:

  • Adobe Photoshop 7, CS, CS2, CS3
  • Adobe Photoshop Elements 2, 3, 4, 5, 6
  • Jasc Paint Shop Pro 7, 8, 9
  • Corel Paint Shop Pro (Photo) X, X1, X2
  • Corel Photo Paint 11,12
  • Xara Xtreme
  • Microsoft Digital Image Suite 2006
  • Macromedia Fireworks 2004, 8
  • Ulead PhotoImpact 8,9,10,11,12

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

கூகுளின் புதிய வசதிகளை பயன்படுத்த.... Google Latest Tips 3

கூகுள் நிறுவனம் குறுகிய கால இடைவெளியில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. நாள்தோறும் பல மாற்றங்களோடு பல சேவைகளை அள்ளி விடும் கூகுள் நிறுவனத்தின் படைப்புகளில் இருந்து அண்மையில் வெளிவந்த அசத்தலான 3 புதிய வசதிகள்

1. கூகுள் குரல் தேடல் ( GOOGLE VOICE SEARCH )
செல்பேசிகளில் பயன்பட்ட இந்த தேடல் முறை இப்போது கூகுள் குரோமில் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் சொற்களை உச்சரிப்பதன் மூலம் தேடித் தருகிறது. தற்போது இந்த வசதி கூகுள் குரோமில் மட்டுமே உள்ளது. உங்கள் மைக்ரோ ஃபோனை தயார் செய்துகொண்டு மைக் பட்டன் கிளிக் செய்தால் SPEAKNOW என தோன்றும், அப்போது நீங்கள் தேடும் சொல்லின் சொல்லை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கான தேடல் தொடங்கும்.

2. தமிழ் மொழி பெயர்ப்பு ( TAMIL GOOGLE TRANSLATE )ஆங்கில மற்றும பிற மொரியில் உள்ள தகவல்களை அப்படியே தமிழுக்கு மொழிமாற்றம் செய்துகொள்ளக் கூடிய வசதியினை அளித்துள்ளது. இதன் மூலம் ஆங்கில மற்றும் பிற மொழி உரைகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய முடியும்.

3. படத்தேடல் ( IMAGE SERCH )
ஒளிப்படங்களைக் கொடுத்து தேடினால் அதற்கு ஒப்பான ஒளிப்படங்களையும் அவை உள்ள தளங்களையும் காண்பிக்கிறது. இதன் மூலம் உங்கள் படங்கள் எங்கு உள்ளன என கண்டுகொள்ள முடியும்.
இந்த வசதியினை பெற கூகுள் இமேஜ் தேடுபக்கத்தில் சென்று, தேடும் பெட்டியில் உள்ள கேமரா பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும். அதில் நீங்கள் தேட விரும்பும் படத்தினை UPLOAD செய்தால் நீங்கள் வழங்கிய படத்திற்கு ஒப்பான படங்களை பெறுவதுடன் அவை எந்த தளங்களில் உள்ளன என அறிந்துகொள்ள முடியும்.

முதல் பக்கத்தில் பக்க எண்ணை மறைத்திட...

வேர்டில் புதியவர்களுக்கு.... வேர்டு தொகுப்பில் டாக்குமென்ட்களை உருவாக்குகையில், முதல் பக்கத்தில் பக்க எண் காட்டப்படுவதையோ, அச்சிடப்படுவதையோ பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் பக்க எண் ஃபார்மெட் செய்யப்படுகையில் முதல் பக்கத்தில் அது காட்டப்படும். இதனை மட்டும் எப்படி மறைக்கலாம் என்று பார்ப்போம்.முதலில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண் காட்டப்படுவதை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம். வேர்டு 2007 மற்றும் வேர்டு 2010 தொகுப்புகளில், டாக்குமென்ட்டைத் திறந்து, அதில் ஹெடர் அண்ட் ஃபுட்டர் என்னும் பிரிவில் இரட்டைக் கிளிக் செய்திடவும். பின்னர், இந்தக்குழுவில், Page Number என்பதில் கிளிக் செய்து, அது தோன்றும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்டு 2003 தொகுப்பில், Header and Footer மீது இரட்டை கிளிக் செய்திடவும். அல்லது View மெனு சென்று கிடைக்கும் மெனுவில் ஹெடர் அண்ட் ஃபுட்டர் தேர்ந்தெடுத்துப் பெறவும். இப்போது கிடைக்கும் ஹெடர் அண்ட் ஃபுட்டர் டூல் பாரில் Insert Page Number என்பதில் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் மற்ற டூல்களையும் பயன்படுத்தி இதனை ஒழுங்குபடுத்தலாம்.
இனி கீழ்க்கண்ட வழிகளில், முதல் பக்கத்தில் தோன்றும் எண்ணை நீக்கலாம். வேர்டு 2007 மற்றும் 2010 தொகுப்புகளில், Page Lay Out டேபினைக் கிளிக் செய்திடவும். அடுத்து, வலது கீழாக உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து Page Set Up குருப் டயலாக் பாக்சினைக் கொண்டு வரவும். பின்னர் Lay Out டேபினைக் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Header and Footer பிரிவில் Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்டு 2003 தொகுப்பில், ஹெடர் அண்ட் ஃபுட்டர் டூல்பாரில், பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்கவும். இங்கு Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி முதல் பக்கத்தில் பக்கஎண் காட்டப்படமாட்டாது.

அதிவேக டேட்டா பரிமாற்றத்திற்கு....! USB 3.0

இந்த செய்தி பலருக்கு தெரிந்திருந்தாலும் புதியவர்களுக்காக.....
அதிவேக டேட்டா பரிமாற்றத்திற்கு துணைபுரியும் தொழில்நுட்பம் வந்துவிட்டது யுஎஸ்பி 3.0. ஏற்கனவே அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் யுஎஸ்பி 2.0 தொழிநுட்பம் சுமார் 480எம்பி/நொடி என்ற விகிதத்திலேயே பலதரப்பட்ட எலக்ட்ரானிக் மற்றும் கணினி துணைக்கருவிகளை இணைத்து பயன் படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யுஎஸ்பி 2.0 முற்றிலும் மேம்படுத்தப்பட்டு அதன் வேகம் சுமார் 5 ஜிபி/நொடி என்ற விகிதத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு யுஎஸ்பி 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற பயனாளர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட யுஎஸ்பி 3.0 தொழிற்நுட்ப கருவி அனைவரது பார்வைக்கும் வைக்கப்பட்டு சுமார் 20 மில்லியன் கருவிகள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. யுஎஸ்பி நிறுவுபவர்களின் அமைப்பின் தலைவர் திரு.ஜெப் ராவன்கிராப்ட், கணினியுகத்தில் யுஎஸ்பி 3.0 வெற்றிபெற்ற இணைப்பு பாலமாகத் திகழ்கிறது எனத் தெரிவிக்கிறார்.
ஏற்கனவே பயன்படுத்தி வந்த மின் தேவையைவிட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தேவைப்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொழில் நுட்பம் தகவல் பரிமாற்ற கட்டமைப்பையும் சிறப்பாக மேம்படுத்தியுள்ளது.
இதற்கென, தனிப்பட்ட சார்ஜர் அமைப்புகள் தேவைப்படாது; மற்றும் 900 மில்லி ஆம்ப்ஸ் மின்சாரமும் 2.0 கருவிகளும் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டது. ஒயர்லெஸ் மற்றும் ஆர்எஸ்-232 சீரியல் கம்யூனிகேஷன் போர்ட்டை பயன்படுத்துவதை விடுத்து யுஎஸ்பி 3.0 பயன்பாடு அதிகரித்துள்ளது.
மைக்ரோசிப், ஐபேடு போன்ற புகழ்பெற்ற கருவி தயாரிப்பாளர்கள் யுஎஸ்பி 3.0 வை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்