புதிய வரவுகள் »

கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 மே, 2013

கணினி வேகமாக செயல்பட

 நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…




1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.


2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.


3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.


4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.


5. கிளிக் "OK", "Apply" & "OK",


6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.


7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".


8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.


9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.


10. "Secondary IDE channel",
Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.


11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு சோதனை பண்ணுங்க

நீங்களும் கணினி பழுது பார்க்கலாம்

உங்கள் கம்ப்யூட்டரை Start செய்யும் போது “NTLDR missing, press ctrl+alt+delete to Restart” என்று வந்தால் என்ன செய்வீர்கள்?
NTLDR என்பது New Technology loader என்பதாகும். கம்ப்யூட்டர் Start ஆகும்போது BIOS ஆனது Harddrive ன் Active Partition MBR க்கான முதலாவது Sector ஜ Read செய்யும் பின்புதான் மற்ற Os பகுதிகள் Loading ஆகும். MBR ஆனது NTLDR ற்கு point செய்யப்பட்டுள்ளது. ஆகவேதான் NTLDR , Ntdetect.com போன்ற பூட்டிங் பைல்களில் ஏதாவது பிழை ஏற்படும் போதுதான் மேற்கூறிய Error message வருகிறது.
இப்படி பிரச்சனை வரும்போது விண்டோஸை புதிதாக நிறுவாதீர்கள் ஏனெனில் இப்படிச் செய்தால் நீங்கள் “My document” ல் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பைல்களும் அளிந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கு சிறந்த வளியொன்று உள்ளது.
•முதலில் கம்ப்யூட்டரை “Restart” செய்யுங்கள்
•பின்பு கம்ப்யூட்டரை ‘விண்டோஸ் CD’ மூலம் பூட்டிங் செய்யுங்கள்
•சிறிது நேரத்தில் Taskbar , Enter=Continue , R=Rapier , F3=Quit போன்றவற்றைக்
கொண்ட திரை தோன்றும்
•அப்போது ‘R’ என்பதை அளுத்துங்கள் பின்பு
•1 Windows என்பதும் அதற்குக்கீழ் Which windows installation would you like to log onto (to cancel, press Enter)? காணப்படும் இதில் 1 ஜ அளுத்துங்கள்.
•பின்பு உங்கள் “Administrator” பாஸ்வேடைக் கொடுத்து “Log on” செய்யுங்கள்.
•இனி C:\Windows> என்பதில் கீழுள்ள Code ஜ Type செய்யுங்கள்
Copy C:\I386\NTLDR H:\
Copy C:\I386\NTDETECT.COM H:\
என்று Type செய்து Enter செய்தால் சரி.
இனி Exit எனறு Type செய்தால் இதை விட்டு வெளியேறலாம். அல்லது ‘Restart’ செய்யுங்கள். இப்போது உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.
குறிப்பு : இங்கு H என்பது “CD Rom Drive” ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் CD Rom Drive ஆக எது உள்ளதோ அதைக் கொடுத்தால் சரி.
குறிப்பு : இங்கு C என்பது எனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் install செய்துள்ள Drive ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் எந்த Drive ல் விண்டோஸ் install செய்துள்ளீர்களோ அதைக் கொடுத்தால் சரி.

சனி, 20 ஏப்ரல், 2013

Graphical User Interface........

Graphical User Interface

   A graphical user interface (GUI), often pronounced gooey, is a type of user interface that allows users to interact with programs in more ways than typing such as computers; hand-held devices such as MP3  players, portable media players or gaming devices; household appliances and office equipment with images rather than text commands. A GUI offers graphical icons, and visual indicators, as opposed to text-based  interfaces, typed command labels or text navigation to fully represent the information and actions available to a user. The actions are usually performed through direct manipulation of the graphical elements.
                         The term GUI is historically restricted to the scope of two-dimensional display screens with display resolutions capable of describing generic information, in the tradition of the computer science research at the Palo Alto Research Center (PARC). The term GUI earlier might have been applicable to other high-resolution types of interfaces that are non-generic, such as video games, or not restricted to flat screens, like volumetric displays.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

கம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் உழைக்க சில வழிகள்

கம்ப்யூட்டரில் சிக்கல் வருவதற்கு முன்பே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளின் மூலம் சிக்கல்கள் நேராதவாறு பராமரிக்கலாம்.

கம்ப்யூட்டர்களை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யுங்கள்
வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்வதால் ஹார்டு டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது

அப்டேட்களுடன் கூடிய ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள்
எந்த வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.
சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருள்களே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகின்றன.

ஃபயர்வால் இன்ஸ்டால் செய்யுங்கள்
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால், ஃபயர்வால் இயக்குவது மிகவும் அவசியம். அதிகாரப்பூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். .இந்த வசதியை, Start=> programs=> accessories=> Systemtools=> Security center சென்று இயக்கலாம்.
டீஃப்ராக் செய்யவும்
டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை ஒழுங்கமைக்கும் செயல்பாடு. அதாவது, நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் . இதனால் கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிப்பதோடு, தேவையற்றவை தவிர்க்கப்படும். நம் இயக்கத்துக்கு தகுந்தாற்போல் இந்த வசதியை இயக்கலாம்.

டிஸ்க்கை சுத்தம் செய்யுங்கள்
உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறனைத் துரிதப்படுத்த, டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் மீதங்களையும் இது முற்றிலும் நீக்கிவிடும்.

இணையதள டவுன்லோடுகளை குறையுங்கள்
இணையதளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். குறிப்பாக அதிகாரபூர்வமற்ற இசை இணைய தளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவற்றிலெல்லாம் கம்ப்யூட்டரை இயங்க விடாமல் செய்யும் திங்கிழைக்கும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.

பயன்படுத்தாத புரோகிராம் களை ரத்து செய்யுங்கள்
இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது, கன்ட்ரோல் பேனலில் உள்ள Add/remove programs பயன்படுத்தி அதனை நீக்கி விடுங்கள். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கம்ப்யூட்டரின் செயல்திறன் அதிகரிக்கும்.

கம்ப்யூட்டரை சுத்தம் செய்யுங்கள்
கம்ப்யூட்டரின் உட்பகுதிகளில் தூசு தங்கி விடாமல் இருக்க, வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசுகளை அகற்றுங்கள்.

நண்பர்களே இப்படி நீங்களும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் பயன்படும்

கணினி டிப்ஸ்

1. வெப் பேஸ்டு இமெயில்

வெப் பேஸ்டு இமெயில் என்பது ஒரு வெப் சர்வரில் உங்களுக்காக நீங்கள் அமைத்துக் கொண்ட இமெயில் வசதி ஆகும். இந்த இமெயில் கணக்கில் வரும் இமெயில்களை ஒரு வெப் பிரவுசர் துணையுடன் அந்த வெப் தளத்தில் நுழைந்து காண வேண்டும். அங்கிருந்தபடி தான் அவற்றைக் கையாள முடியும். கூகுள், விண்டோஸ் லைவ், யாஹூ ஆகியன இந்த வகையைச் சேர்ந்தவையே.

2. பைலை அழிக்க…

ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

3. தேடல் சுலபம்

இணையத் தேடலில் வெப்சைட் முகவரியை முழுவதுமாக டைப் செய்யத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக http://www.dinamalar.com/ என இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அட்ரஸ் பாரில் அடிக்க வேண்டுமா? முழுவதும் அடிக்க வேண்டாம். ஜஸ்ட் dinamaar என அடித்து கண்ட்ரோல் அழுத்தி என்டர் தட்டினால் போதும். முழு முகவரியினை எக்ஸ்புளோரர் தொகுப்பு உங்களுக்காக அமைத்திடும். இது .com என முடியும் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

4. டீ பக் டூல்

டீ பக்கிங் சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் இந்த சொல் அடிக்கடி பயன்படுகிறது. புரோகிராம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பிழைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கி செம்மைப் படுத்துவதனை இந்த சொல் குறிக்கிறது. இதனைக் கண்டறியவும் டீ பக் டூல் என அழைக்கப்படும் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன. இந்த டீ பக் டூல் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் கோட் வரிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் காட்டும்.

5. டூயல் பூட்

கம்ப்யூட்டர் ஒன்றை இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வழியாக பூட் செய்யும் திறனை இது குறிப்பிடுகிறது. லினக்ஸ் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில் பலரும் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து இயக்குவதனைக் காணலாம்.

6. மவுஸ் பாய்ண்ட்டர்

இதுதான் நீங்கள் மவுஸை நகர்த்துகையில் அங்கும் இங்கும் அலையும் பாய்ண்ட்டர். வழக்கமாக மேல் நோக்கி சிறிது சாய்வானதாக இருக்கும். இதனை மாற்றுவதற்கும் வசதிகள் உள்ளன. உரிக்கும் வாழைப்பழம், சிரிக்கும் முகம் என இந்த பாய்ண்ட்டரை மாற்றலாம். ஆனால் இவை அனிமேஷன் வகை என்பதால் ராம் மெமரி தேவையில்லாமல் காலியாகும். மேலும் அம்புக் குறியில் உள்ள தெளிவு, சுட்டிக் காட்டும் தன்மை இவற்றில் இருக்காது.

7. ஐ.எஸ்.ஓ., இமேஜ்….

ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்ப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால் ஐ.எஸ்.ஓ. இமேஜ் வேண்டுமா என உங்கள் சிடி பர்னிங் சாப்ட்வேர் கேட்கும்போது யெஸ் கொடுத்து அந்த பைலை உருவாக்கி அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்துப் பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

8. கேஷ் மெமரி

கேஷ் மெமரி: அடிக்கடி பயன்படுத்தும் டேட்டாவினைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் மெமரி வகையினை இது குறிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க முடிகிறது. இதனை இச்ஞிடஞு என ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

9. கரண்ட் பேஜ் பிரிண்ட்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து கிடைக்கும் விண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக் கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்துக் கொண்டு பின் Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.

10. ஷிப்ட் கீயின் பயன்பாடுகள்

சில செயல்பாடுகளை ஷிப்ட் கீயுடன் (Shift) மேற்கொண்டால் அது கூடுதல் பயன்களைத் தரும். எடுத்துக்காட்டாகப் பைல் மெனு கிளிக் செய்தால் வழக்கம்போல சில செயல்பாடுகளுக்கான கட்டங்கள் பட்டியலிடப்படும். ஆனால் ஷிப்ட் கீயுடன் அதனைக் கிளிக் செய்தால் Close All, Save All, and Paste Picture என்ற கூடுதல் பயன் பாட்டுக் கட்டங்கள் கிடைக்கும். சில டூல் பட்டன்கள் ஷிப்ட் கீயுடன் இணையும் போது அதன் செயல் பாடுகள் மாறுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டன் டபுள் அன்டர்லைன் கோடு தரும் பட்டனாக மாறும். Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

11. செல்லின் மதிப்பும் தோற்றமும்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள செல்களில் நாம் எண்களை இடுகிறோம். இதனால் அந்த செல்லில் ஒரு மதிப்பு அமைக்கப்படுகிறது. இந்த மதிப்பு மாறாது. எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 1234 என அமைத்தால் அந்த செல்லின் வேல்யு எப்போதும் 1234 தான். ஆனால் இதனை எக்ஸெல் நமக்குக் காட்டுகையில் 1,234 என்று காட்டலாம். அல்லது $1234 எனக் காட்டலாம். இது எப்படி அந்த செல் பார்மட்டை நாம் அமைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. ஆனால் இதன் வேல்யு எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

12. செல் செலக்ஷன்

அதிக எண்ணிக்கையில் செல்களை செலக்ட் செய்திட வேண்டுமா? நீங்கள் திட்டமிடும் Range முதல் செல்லை கிளிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் Edit மெனு சென்று Go To தேர்ந்தெடுங்கள். பின் Go To டயலாக் பாக்ஸில் உங்கள் ரேஞ்சில் எதிர்ப்புறமாக உள்ள கடைசி செல்லின் எண்ணை அமைத்துவிட்டு Shift அழுத்தியவாறே ஓகே கொடுங்கள். நீங்கள் செட் செய்திட விரும்பும் அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்.

13. எக்ஸெலில் குறிப்பிட்ட செல் செல்ல

உங்களுடைய ஒர்க் ஷீட் பெரிதாக இருந்து மானிட்டர் திரை அளவின் காரணமாக அனைத்து செல்களும் தெரிய வாய்ப்பில்லை. எனவே திரையில் காட்சி அளிக்காத ஒரு செல்லுக்குச் செல்ல என்ன செய்யலாம்? Edit மெனு சென்று அதில் Go To அழுத்தலாம். அல்லது F5 அழுத்தலாம்.

இப்போது Go To டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Reference என்ற சிறிய கட்டத்தில் செல்லின் அடையாள எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல்லுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செல்களை வரிசையாக Go To டயலாக் பாக்ஸ் நினைவில் வைத்திருக்கும். ஒரே செல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் Go To பாக்ஸில் அதன் மீது டபுள் கிளிக் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் அதனை டைப் செய்திட வேண்டியதில்லை.

செவ்வாய், 26 ஜூலை, 2011

மடிக்கணினி வைத்திருப்பர்கள் கவனத்திற்கு...


மடிக்கணினி வாங்கி மிகப் பழையதாக ஆகும்போது அதன் தொடக்க இயக்கம் (ஸ்டார்ட் அப்) மட்டுமின்றி பயன் பாடுகளின் இயக்கமும் மிகமெதுவாகவே நடைபெறும்.
உடன் மின்சாரம் வழங்கும் பேட்டரியை மாற்றினால் சரியாக இருக்கும் என ஆயிரக்கணக்கான பயனாளர்கள் கைவசமிருக்கும் பேட்டரியை பயன் படுத்தாமல், புதிய பேட்டரியை வாங்கி பொருத்திக் கொள்வார்கள். அவ்வாறு செய்யாமல் பின்வரும் படிமுறைகளை பின்பற்றி பேட்டரியை புத்தாக்ககம் செய்து புதிய பேட்டரியை போன்றே பயன்படுத்தி கொள்ள முடியும்.
1. மடிக்ணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம் செய்யுங்கள்.
2. பின்னர் மின்தொடர்பை துண்டித்து விட்டு மடிக்கணினியை பேட்டரியின் மின்சாரம் முழுவதுமாக காலியாகும்வரை பயன்படுத்துங்கள். பேட்டரியின் மின்சாரம் முழுவதும் காலியாகும் நிலையில் நாம் செய்து வந்த செயல்களை சேமித்து கொண்டு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்யவும்.
3. இதேநிலையில் சுமார் 5 அல்லது 6 மணிநேரம் அதிகபட்சம் ஒரு இரவு முழுவதும் மடிக்கணினியை இயக்காமலேயே வைத்திருந்து மீண்டும் மடிக்கணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம் செய்யுங்கள்.
இப்போது மடிக்கணினியை இயங்க செய்துவழக்கமான நம்முடைய செயல்களை செய்யலாம். இதன் மூலம் மடிக்கணினியின் பேட்டரியின் திறன்புத்தாக்கம் பெறுகின்றது. இவ்வாறாகன செயலை அவ்வபோது செய்து பேட்டரியின் வாழ்நாளை கூடுதலாக்கி பயன்படுத்த முடியும்.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

உங்கள் வலைப்பூ பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவாக்க

நாம் எழுதும் ஏதாவது ஒரு பதிவு ஏதோ பத்திரிகையிலோ அல்லது புத்தகத்திலோ வந்தால் எவ்வளவு சந்தோசப்படுவோம். நம்முடையை அனைத்து பதிவுகளையும் அப்படியே ஒன்றாக புத்தகமாக வெளியிட்டால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. நம் பதிவுகள் அனைத்தையும் எப்படி நாம் புத்தகமாக உருவாக்குவது என்றே இங்கு காணபோகிறோம்.

இதற்க்கு முதலில் உங்கள் வலைப்பூ அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.பின்பு Dassboard- Settings – Site feed – Full- Save Settings -என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

இந்த சேவையை நமக்கு ஒரு வலைத்தளம் செய்கிறது. இந்த தளத்தில் நம் புத்தகத்தை உருவாக்கும் வரை இலவசமே. ஆனால் அதை டவுன் லோட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் க்ளிக் BLOG2PRINT செய்யவும்.

இந்த தளம் சென்ற உடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் இதில் உங்களுடைய வலைப்பூவின் முகவரியை கொடுத்து Print My Blog என்ற அருகில் இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுடைய பிளாக் ஸ்கேன் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.

  • Include Posts: இந்த இடத்தில் உங்களுக்கு எத்தனை பதிவுகள் புத்தகமாகக வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொள்ளவவும். (ALL POSTS செலக்ட் செய்ய வேண்டாம் சில சமயம் சரியாக இயங்கவில்லை.)
  • Labels: இதில் உங்கள் பதிவுகளை நீங்கள் உங்கள் labels வகையில் வகை படுத்தலாம்.
  • Comments: நம் பதிவை படித்துவிட்டு வாசகர்கள் கூறும் கமென்ட் ஆக்டிவேட் செய்ய.
  • Page Template: இந்த இடத்தில் நீங்கள் Compact செலக்ட் செய்வதே சிறந்தது.
  • Order of Posts: உங்களின் பதிவுகள் வரிசை படுத்த.

அடுத்து COVERS என்ற பகுதி இருக்கும். இதில் உங்கள் புத்தகத்தின் அட்டை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

அடுத்து உள்ள DEDICATION என்ற இடத்தில் உங்கள் புத்தகத்தின் ஏதேனும் முன்னுரையை கொடுத்து கீழே உள்ள CREATE MY BOOK என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் உங்கள் புத்தகம் தயாராகி கொண்டிருக்கிறது. சிறிது நேரம் காத்திருக்கவும். முடிவில் உங்கள் புத்தகம் தயாராகி வரும்.

தேவைபட்டால் நீங்கள் அங்கே கொடுக்கபட்டிரும் விலை பட்டியலில் சொடுக்கி உங்கள் புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

இண்டல் (Intel): CPUs (மைய செயலகம் ) உள்ளடக்கப்பட்ட Graphic உடன் 2010தின் ஆரம்பத்தில் வரவுள்ளது.

Intelலின் அடுத்த தலைமுறையான CPU (மைய செயலகம் ) Clarkdale என்னும் பெயருடன் அதிகளவில் தயாரிக்கப்படவுள்ளது. முதல் முறையாக இன்டல் CPU (மைய செயலகம் )க்குள் Graphic chip உள்ளடக்கம் செய்து வெளியிடவுள்ளது. இது 2010தின் ஆரம்பத்தில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த CPU (மைய செயலகம் ) 32-nm அளவில் தயாரிக்கப்படும். ஆனால் அதன் உள் உள்ளடக்கப்படும் Graphic chipபின் அளவு 45 nmஆக இருக்கும். இந்த புதிய மைய செயலகம் கணினியை புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு ஆரவமுள்ளதாக இருக்கும். மற்றும் நடுத்தர சந்தை தரத்தை நிறப்பவுள்ளது. உள்ளடக்கப்பட்ட Graphic chipபின் வலு எவ்வாறு இருக்கும் என்பது இன்னும் தெரிய வரவில்லை. இதன் வலு Mainboard Graphic chipபின் வலுவுடன் ஒப்புடக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Clarkdale மைய செயலகம் 2009 கடைசிப்பகுதியில் பெரிய நிறுவணங்களுக்கு அனுப்பபடும். எனவே

2010தில் சந்தையில் கிடைக்கும் என்பது உறுதி.

திங்கள், 6 செப்டம்பர், 2010

புகைப்படம் ஒரிஜினலா? இல்லையா? என்று கண்டறிய...

நிறைய புகைப்படம் கணணியில் வைத்து இருப்போம் ஆனால் அதில் எத்தனை புகைப்படங்கள் உண்மையானவை என்று தெரியும் உங்களுக்கு புகைப்படக்கருவி மூலம் எடுத்தாத அல்லது அடோப் போட்டோஷாப் மூலம் எடிட் செய்து உருவாக்கப்பட்டது எந்த புகைப்படக்கருவி மூலம் எடுக்கப்பட்டது அதை எவ்வாறு கண்டுபிடிப்பது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் ஜேபிஜிஸ்னுப் இந்த மென்பொருள் மூலம் மேலுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் இதன் மூலம் கிடைத்து விடும்.
இதன் சிறப்பம்சங்கள்

1. .JPG, .THM, .AVI, .DNG, .CRW, .CR2, .NEF, .ORF, .PEF, .MOV, .PDF

No Preview Available - Windows Explorer
Drawing Failed - Windows Picture & Fax Viewer
This document may be damaged (the file may be truncated or incomplete) - Photoshop
Can't read file header! Unknown file format or file not found! - IrfanView
Could not complete your request because an unknown or invalid JPEG marker type is found - Photoshop
இது போன்ற பிழைகள கூறும் புகைப்படங்களை திறக்க முடியும்.

2. இந்த மென்பொருள் மூலம் பார்க்க திறக்க முடியாத புகைப்படங்களையும் திறக்க முடியும் (Corrupt Photos Recover & View)

இதற்கு உதாரணமாக சில புகைப்படங்கள் கீழே

மென்பொருள் தரவிறக்கம்

சிப் மென்பொருள் - SIP SOFTWARE

நாம் அனைவரும் வருடத்திற்கு இரண்டு முறையாவது நமது கணணியை பார்மெட் செய்து இருப்போம் அவ்வாறு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் நாம் கணணியில் அடிப்படை மென்பொருட்களான யாகூ மெசஞ்சர், ஒபன் ஆபிஸ், கேம் ப்ளேயர், ஸ்கைப், அடோப் ப்ளாஸ் ப்ளேயர், விண்ரேர் போன்ற மென்பொருட்களை தரவிறக்கி பிறகு தனித்தனியாக நிறுவ வேண்டும்.
இவை அனைத்தும் மட்டுமல்லாது இன்னும் பிற சுதந்திர கட்டற்ற மென்பொருட்கள் இணைந்து ஒரே மென்பொருளாக நிறுவ ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் சுருக்காமாக் சிப் என்று அழைக்கப்படும் ஸ்மார்டர் இன்ஸ்டாலர் பேக். நான் மேற்கூறிய மென்பொருள் அல்லாது நிறைய மென்பொருட்கள் உள்ளது. இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மென்பொருளின் இணையதளம் சுட்டி
மென்பொருள் தரவிறக்க சுட்டி


Yahoo Messenger

Yahoo Widgets

Skype

Google Earth

Winamp

Firefox

Bittorent

Gmail Notifier

Rocket Dock

Codecs Pack

Adobe Flash Player

Apple QuickTime

SunJava

Adobe Reader

WinRar

Open Office

Daemon Tools

ThunderBird

Gimp

Picasa

Avira Antivirus

Google Chrome

CCleaner

KmPlayer

வண்ணங்களும் அதன் பெயர்களும்

ஒவ்வொரு வண்ணங்களுக்கும் ஒரு பெயர் உண்டு அந்த பெயர்கள் அனைவருக்கும் தெரியாது அதற்காக ஒரு இணையதளம் உண்டு அந்த இணையதள சுட்டி

வியாழன், 29 ஜூலை, 2010

பாரகன் டிரைவ் பேக்அப் இலவச மென்பொருள் (32 பிட்)

clip_image002"Paragon Drive Backup Free Edition"

இயங்குதளங்கள், கோப்புக்கள்,செயலிகள் போன்றவற்றை ஒரு வன்வட்டுவிலிருந்து ஒன்னொறு வன்வட்டுக்கு நகலெடுக்கும்.

புதிய வன்வட்டு ஒன்றை நீங்கள் மாற்றும் போது, இயங்குதலத்தை மீண்டும் நிறுவ வேண்டிய அவசியமில்லை. எனெனில் Boot பகுதியையும் சேர்த்தே இது நகல் எடுக்கிறது.

தனியார் பாவணைக்கு"Paragon Drive Backup Free Edition" நன்கு பொருத்தமான் செயலி.

ஜேர்மன் மொழி தெரிந்தவர்கள் இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள இங்கு சொடுக்கவும்.

ஆவணங்கள் OffiSyncகின் உதவியுடன் கூகில் சக்தி Microsoft அலுவலக செயலிக்கு (Microsoft Office)கிடைக்கிறது

clip_image002

ஆவணங்கள்: OffiSyncகின் உதவியுடன் கூகில் சக்தி Microsoft அலுவலக செயலிக்கு (Microsoft Office)கிடைக்கிறது.

OffiSync என்பது அலுவலகப் பயன்பாடுக்கான(MS Office) ஒரு இலவச சொருகி (Plugin).

ஒருமுறை பயண்படுத்திப்பார்த்தால் நாம் ஒருபோதும் மறக்க விரும்பாத சிறிய செயலியாகிவிடும்.

இதன் நடைமுறைப்பயண் அவ்வளவு சிறந்த்தது.

Google Docs in Word, Excel und Powerpoint க்குள் இந்த செயலி சொருக்கப்பட்டு இருக்கும்

இதன் பயண்

உதாரணமாக உங்கள் Wordடில் ஆவணங்களை தயாரித்துக்கொண்டிருக்கும் போதே

Wordஊடக புகைப்படங்களையோ, தகவள்களையோ கூகிலில் தேட முடியும். அதை ஆவணத்தில் ஒட்டமுடியும் (paste).

அத்துடன் உங்கள் Word-ஆவணங்கள், Powerpoint, Excel களை Google Docs உடன் sync செய்யமுடியும்.

இதன் மூலம் நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் ஆவணங்களை

பார்வையிடவும் அதை மேலும் திருத்தம் செய்யவும் முடிகிறது.

புதன், 28 ஜூலை, 2010

கணினி திரை மேசையின் (Desktop) புரட்சி ஆரம்பித்துவிட்டது.

clip_image002 Gnome 3.0 என்னும் திரைமேசையின் மேம்படுத்தி,

சதாரணமாக நாம் சிந்திக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

செயலிகளை ஆரம்பிப்பது, ஆவணங்களை திரப்பது, பரமரிப்பது, Desktop ஓழுங்கமைப்பது:

இப்படிப்பட்ட முக்கிய வேலைகளை மையமாக கொண்டு புதிய Desktop

சூழ்நிலமைகளை Gnome 3.0 புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவர்வுள்ளது.

முந்தைய பரிட்சார்ந்த பதிப்புக்கள் எதிர்களத்தில் Desktop எப்படி இருக்கும் என்பதை காட்டியது.

Gnome 3.0க்கு கைகொடுக்கும் Shell மூன்று புதிய விடையங்களை கொண்டுவந்துள்ளது:

User Menu, Sidebar, தகவள் பரமரிப்பு, அடிக்கடி பயண்படுத்தும் ஆவணங்களை வேகமாக

மீண்டும் பெற்றுக்கொள்வது. இது போன்ற ஆர்வத்திற்குறிய அநேக விடயங்களை இங்கு காணலாம்.

clip_image004 Gnome Shell: Desktop-மையகம்.

Overlay ஒரு அற்புதமான புதிய சிந்தனை.

இதன் உதவியுடன் உங்கள் Desktop நீங்கள் விரும்பிவிதம் ஒழுங்கமைக்கலாம்

clip_image006

இது போன்ற இன்னும் அநேக விடயங்களை இது குறித்து பேசிக்கொண்டே போகலாம்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

சொடுக்காமலேயே (கிளிக்) தேடுவதற்கு ஒரு தேடுபொறி

எத்த‌னை கால‌ம் தான் கூகுலையே ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டிருப்ப‌து ஒரு மாற்ற‌ம் தேவை என‌ நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக புதியதொரு தேடுபொறி அறிமுகம் ஆகியுள்ளது. கூகுலை விட்டு விட்டு இனி தாரளமாக அந்த தேடுபொறியை பயன்படுத்தி பார்க்கலாம்.

அட போங்கய்யா கூகுலைவிட சிறந்த தேடுபொறியா? எத்தனை முறை இதே வர்ணனையை கேட்டு ஏமாந்திருக்கிறோம் என அலுத்து கொள்பவர்கள் கவனிக்க உண்மையிலேயே சூப்பர் தேடுபொறி இது என்ப‌தை உறுதியாக‌ சொல்ல‌லாம்.

ட‌க்ட‌க்கோ என்னும் விநோத‌மான‌ பெய‌ர் கொண்ட‌ அந்த‌ புதிய‌ தேடுபொறி உண்மையிலேயே கூகுலுக்கு மாற்றாக‌ விள‌ங்க கூடிய‌ ஆற்ற‌லை பெற்றிருக்கிற‌து.

இணைய‌ உல‌கில் ச‌ற்றேர‌க்குறைய‌ இர‌ண்டாயிர‌த்துக்கும் அதிக‌மான‌ தேடுபொறிகள் உள்ள‌ன‌. இவ‌ற்றில் ப‌ல‌ அறிமுக‌மாகும் போது கூகுலுக்கு மாற்று என‌ வ‌ர்ணித்துக்கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம் தான்.ஒரு சில‌ தேடுபொறிகளை அடுத்த‌ கூகுல் என்று ப‌த்திரிகைக‌ள் வ‌ர்ணிப்ப‌தும் வ‌ழ‌க்க‌ம்.ஆனால் இதுவ‌ரை எந்த‌ தேடுபொறியாலும் கூகுலை ஒர‌ங்க‌ட்ட முடிய‌வில்லை.

முன்னால் கூகுல‌ர்க‌ளால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ குயில்(cuil) தேடுபொறி கூட‌ இப்ப‌டி தான் கூகுலுக்கான‌ சவால் என்று அழைக்க‌ப்ப‌ட்டு ஏக‌ ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்திய‌து. அத‌ன் பிற‌கு என்ன‌ ஆன‌து என்றே தெரியாம‌ல் போய் இப்போது விக்கிபீடியா பாணியில் க‌ள‌ஞ்சிய‌ தேடுபொறியாக‌ தன்னை உருமாற்றி கொண்டுள்ள‌து.

தேடிய‌ந்திர‌ வ‌ர‌லாற்றை அறிந்த‌வ‌ர்க‌ள் புதிய‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் வ‌ரும் போகும் ஆனால் கூகுல் எல்லோராலும் நாட‌ப்ப‌டும் தேடுபொறியாக‌ தொட‌ரும் என்ப‌தை அறிந்தேயிருப்பார்க‌ள். அதிலும் சாம‌ன்ய‌ இணைய‌வாசிக‌ளை பொருத்த‌வ‌ரை தேட‌ல் என்றால் கூகுல் தான்.

கூகுல் அத‌ன் வேலையை ஒழுங்காக‌ செய்கிற‌து என்ப‌தும் அத‌னை மிஞ்ச‌க்கூடிய‌ தொழில்நுட்ப‌ம் இன்னும் சாத்திய‌மாக‌வில்லை என்னும் நிலையில் இன்னுமொரு தேடுபொறியாக‌ உத‌ய‌மாகியுள்ள‌ ட‌க்ட‌க்கோ மாறுப‌ட்ட‌ தேடுபொறி என்னும் உண‌ர்வை முத‌ல் பார்வையிலேயே த‌ந்து விய‌க்க‌ வைக்கிற‌து.

கூகுலைப்போல‌வே இன்னொரு தேடுபொறி என்று த‌ன்னை ம‌ற்றி அட‌க்க‌மாக‌வே கூறிக்கொள்ளும் ட‌க்ட‌க்கோ கூகுலுக்கு ப‌திலாக‌ ஏன் த‌ன்னை முய‌ன்று பார்ப்ப‌த‌ற்கு என்று நெத்திய‌டியாக‌ சில‌ கார‌ண‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடுகிற‌து.

கூகுலை விட‌ சிக்க‌ல் இல்லாத‌ தேட‌ல் பக்க‌ம்,விள‌ம்ப‌ர‌ இடையூறு இல்லாத‌ தேட‌ல் முடிவுக‌ள் ,சிற‌ப்பான‌ குறுக்கு வ‌ழிக‌ள் என‌ நீளும் அந்த‌ ப‌ட்டிய‌லில் உண்மையிலேயே நெத்திய‌டியான அம‌ச‌ம் சுழிய சொடுக்கும் வ‌ச‌தியாகும். சுழிய கிளிக் என‌ குறிப்பிட‌ப்ப‌டும் இந்த‌ வ‌ச‌தியை சொடுக்காமலேயே தேடுவ‌து என‌ புரிந்து கொள்ள‌லாம்.

அதெப்ப‌டி கிளிக் சொடுக்காமலேயே தேடுவ‌து சாத்திய‌மா? வழக்கமாக தேடும் போது என்ன செய்வோம். கீவேர்டை டைப் செய்துவிட்டு தேடு என க‌ட்ட‌ளையிடுவ‌து போல‌ என்ட‌ர் த‌ட்டுவோம் அல்ல‌வா?அத‌ன் பிற‌கு தேட‌ல் முடிவுக‌ள் வ‌ந்து நிற்கும் அல்ல‌வா?அதில் ஏதாவ‌து ஒன்றை கிளீக் செய்தால் தான் தேவிஅயான் த‌க‌வ‌ல்க‌ளை பெற‌ முடியும். ஆனால் ட‌க்ட‌க்கோ தேடிய‌ந்திர‌மோ கிளிக் செய்த‌துமே தேட‌ப்ப‌டும் ப‌த‌ம் தொட‌ர்பான அறிமுக குறிப்புக‌ளாக‌ சில‌ த‌க‌வ‌ல்க‌லை அளிக்கிற‌து.

இந்த‌ குறிப்புக‌ள் மிக‌ச்ச‌ரியாக‌ தேட‌ப்ப‌டும் பொருள் குறித்த‌ ச‌ரியான‌ அறிமுக‌மாக‌ அமைந்து விடுகிற‌து.உதார‌ன‌த்திற்கு பிரெஞ்சு ஒப‌ன் என் தேடினால் பாரிசில் மே மாத‌ம் துவ‌ங்கி ந‌டைபெறும் டென்னிஸ் போட்டி என்ற‌ அறிமுக‌ம் கிடைக்கிற‌து.ப‌ல‌ நேர‌ங‌க்ளில் தேட‌ப்ப‌டும் பொருளை புரிந்து கொள்ள‌ இந்த‌ அறிமுக‌ம் உத‌வ‌லாம். சில‌ நேர‌ங்க‌ளில் இந்த அறிமுக‌மே கூட‌ போதுமாக‌ இருக்க‌லாம்.புதிய‌ பொருள் குறித்து மிக‌ அவ‌ச‌ர‌மாக‌ தேடும் போது அறிமுக‌ குறிப்புகள் நிச்ச‌ய‌ம் ப‌யனுள்ள‌தாக‌ இருக்கும்.

விக்கிபீடியா போன்ற‌ த‌ள‌ங்க‌ளில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்டாலும் கூட இந்த‌ அறிமுக‌ம் ப‌ய‌னுள்ள‌தாக‌வே இருக்கிற‌து.விரிவான‌ தேட‌ல் தேவை என்றால் ப‌க்க‌வாட்டில் உள்ள‌ வ‌ச‌தியை துணைக்கு அழைத்து யூடியூப் உட‌ப‌ட‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் தேட‌ முடியும்.

இந்த‌ தேடுபொறியில் கூகுல் என‌ டைப் செய்து பார்த்தால் கூகுல் என்றால் ப‌ல‌ அந்த‌த‌ம் உண்டு உங்க‌ளுக்கு எது வேண்டும் என்று கேட்க‌ப்ப‌டு அத‌ன் கீழேயே கூகுல் என்றால் தேடிய‌ந்திர‌ம் என்ற‌ அறிமுக‌மும் இட‌ம் பெறுகிற‌து.ப‌லவித அர்த்த‌ங்க‌ளில் ஒன்றாக‌ கூகுல் என‌ முடியும் பெய‌ர் கொண்ட‌வ‌ர்களும் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

இந்த அம‌ச‌த்திற்காக‌ நிச்ச‌ய‌ம் இத‌னை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்க்க‌லாம்.இத‌னை த‌விர‌ தேட‌ல் ப‌க்க‌ம் கூகுலைவிட‌ தெளிவான‌தாக‌ சிக்க‌லில்லாம‌ல் இருப்ப‌தாக‌ கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதே போல‌ தேட‌ல் வ‌ர‌லாற்றை சேமித்து வைப்ப‌தில்லை என்றும் குறிப்ட‌ப்ப‌ட்டூள்ள‌து.

இந்த‌ அம‌ச‌ங்கள் எல்லாவ‌ற்றையும் கூகுலோடு ஒப்பிட்டு பார்க்கும் வ‌ச‌தியும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

எல்லாவ‌ற்றுக்கும் மேல் இத‌ முக‌ப்பு ப‌க்க‌ம் வ‌ண்ண‌ம‌ய‌மாக‌ வாத்து ம‌ற்றும் இத‌ர ஐகான்க‌ளோடு அழ‌காக‌வே இருக்கிற‌து.அதோடு கூகுலில் இருக்கும் அதிர்ஷ்ட‌ தேட‌ல் வ‌ச‌தியை போல‌ (ஐஅய்ம் பீலிங் ல‌க்கி) ஐய‌ம் பீலிங் ட‌க்கி என்னும் கூடுத‌ல் வ‌ச‌தியும் உண்டு.
——–

http://duckduckgo.com/?q=&t=i

வியாழன், 15 ஜூலை, 2010

கீறல் விழுந்த சி.டி டிவிடியில் இருந்து தகவல்களை பெற…

Posted Image
சி.டி அல்லது டி.வி.டி வாங்குகிறோம் அதில் மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துள்ளோம் என்று வைத்து கொள்வோம்.. ஒரு சூழ் நிலையில் வட்டவடிவமான அந்த சி.டியில் முதற் புள்ளியிலே கீறல் விழுந்துவிட்டது எனில் சி.டி டிரைவரானது அடுத்த கட்டம் நோக்கிநகராது… அதற்கு பின்னுள்ள அதாவது சேமித்து வைத்துள்ள தகவல்களையும் பெற இயலாது… என்ன செய்யலாம் அத்தகைய சூழ்நிலைகளில் கைகொடுப்பதுதான் ஐசோபஸ்டர்…
Posted Image
இதை உங்கள் கணிணியில் நிறுவுங்கள் பிறகு .. அந்த தகறாரு பிடித்த சி.டி அல்லது டி.வி.டியை டிரைவரில் சொருகுங்கள் பிறகு இந்த மென் பொருளை இயக்குங்கள்… கீறல் விழுந்த அந்த இடத்தில் உள்ள தகவல்களை தவிர.. மீதமுள்ள அனைத்தையும் உங்கள் கணிணியில் சேமியுங்கள்….

புதன், 14 ஜூலை, 2010

நிட்ரோ பி.டி.எப். ரீடர் (Nitro PDF Reader)

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர், இப்போது தங்களுடைய பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க, அடோப் பிடிஎப் ரீடருக்குப் பதிலாக, வேறு பி.டி.எப். ரீடர்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதற்குக் காரணம், பல வைரஸ் புரோகிராம்கள், அடோப் நிறுவன அப்ளிகேஷன் புரோகிராம்களைக், குறிப்பாக அடோப் பி.டி.எப். ரீடர் தொகுப்பினைப் பயன்படுத்தியதுதான். இதற்கு வேறு காரணங்களும் இருந்தன. இந்த புரோகிராம்களில், பிடிஎப் பைல்கள் வேகமாக இறங்கின. சிறப்பான கூடுதல் வசதிகளும் தரப்பட்டன. இவற்றில் பிரபலமானவை பாக்ஸ்இட் ரீடர், சுமத்ரா மற்றும் பிடிஎப் எக்சேஞ்ச் வியூவர் ஆகும்.
அண்மையில் இன்னுமொரு பிடிஎப் ரீடர் தொகுப்பினைக் காண நேர்ந்தது. இதன் பெயர் நிட்ரோ பிடிஎப் ரீடர் (Nitro PDF Reader). இதுவும் மற்ற பிடிஎப் ரீடர்களைப் போல இலவசமாகவே கிடைக்கிறது. இது மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகவே இயங்குகிறது. இதில் தரப்படும் எடிட்டிங் மற்றும் சேவிங் வசதிகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது.இதன் அனைத்து ஆப்ஷன்களும், அதன் ஹெடரிலேயே தரப்பட்டுள்ளதால், அவற்றை அணுகிப் பெறுவது எளிதாகிறது.இதில் எடிட் செய்யப்படும் பிடிஎப் பைல்கள், மற்ற பிடிஎப் ரீடர் புரோகிராமிலும் படிக்க முடிகிறது. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் இயக்கத் தொகுப்புகளுக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. அவசியம் இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்