புதிய வரவுகள் »

நன்மைகளும்... தீமைகளும்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்மைகளும்... தீமைகளும்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கணினியை பராமரிக்க எளிய வழிமுறைகள்

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.

கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.

நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.

சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது.

எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.

நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.

கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.

கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?

உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.

அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும்

அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.

Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.

இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது.

கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

கண்களை பாதுகாக்க மென்பொருள்

நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகி றோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப் பதை பலர் மறந்துவிடுகிறோம்.
அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந் திருப்பீர்கள்.

பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.

நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.

இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.

இதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windowsல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.

3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.

இது முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன. இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

பாதுகாப்பான இணையதளத்தை அறிய வேண்டுமா?

குறிப்பாக எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும் இடத்தில் https:// என்று இருந்தால் அது பாதுகாப்பானது.இதன் உறுதியான, பாதுகாப்பான நிலையில் நம்பிக்கை வைத்து தகவல்களைத் தரலாம். இன்னொரு வழியும் உள்ளது. http://www.google.com/safebrowsing/diagnostic?site=“ ” என டைப் செய்து மேற்கோள் குறிகளுக்கிடையே அந்தக் குறியீடுகள் இல்லாமல் அந்த தளத்தின் முகவரி கொடுத்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் தரவும்.

அந்த தளம் குறித்த தகவல்கள், அதன் தன்மை குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த 60 அல்லது 90 நாட்களில் அந்த தளத்தினை கூகுள் நிறுவனம் சென்று வந்தது எனவும், எந்த வித கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்பினை அது பரவவிடவில்லை எனவும் சான்றிதழ் கிடைக்கும்.

மோசமான தளமாக இருந்தால் அதன் தன்மை குறித்து தகவல் இருக்கும்

திங்கள், 13 செப்டம்பர், 2010

கணினி பயனாளர்களே கவனம் தேவை

நாம் தினமும் கணினி பயன் படுத்துகிறோம் ஆனால் பலரும் சரியாக மமுஸையும் கீபோர்டையும் பயன் படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதோ சில வழிமுறைகளை தெறிந்துகொள்ளுங்கள்.

cid:1.4706173@web33605.mail.mud.yahoo...com
cid:2.4706173@web33605.mail.mud.yahoo.com
cid:3.4706173@web33605.mail.mud.yahoo.com

Correct way to work on the Computer


cid:4.4706173@web33605.mail.mud.yahoo.com
cid:5.4706173@web33605.mail.mud.....yahoo..com
cid:6.4706173@web33605.mail..mud.yahoo.com
cid:7.4706173@web33605...mail.mud.yahoo.com
cid:8.4706173@web33605...mail.mud.yahoo.com

Hand Exercises for Carpal Tunnel Syndrome :

cid:12.4706173@web33605.mail.mud.yahoo.comcid:10.4706173@web33605.mail.mud.yahoo.comcid:11.4706173@web33605.mail.mud.yahoo.comcid:12.4706173@web33605.mail.mud.yahoo.comcid:13.4706173@web33605.mail.mud.yahoo.com

திங்கள், 6 செப்டம்பர், 2010

புகை நமக்கு பகை, புகைப்பிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

புகைப்பிடிப்பதனால் வரும் தீமைகள் குறித்து சில விளம்பரபடங்கள் கொடுத்துள்ளேன்.
புகைப்பிடிப்பதனால் உங்களுக்கும் மட்டுமல்ல உங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு உருவாக்குகிறீர்கள்.
புகையை மற பகையை மற நல்லவை நேசி

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்