புதிய வரவுகள் »

செவ்வாய், 14 ஜனவரி, 2014

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனர்களே உஷார்!!!...

தற்போது மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம், நடப்பு 2014 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள் அதிக அளவில் பரவத் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும் நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ இயங்குகிறது. இந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன. எனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன. தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. ஸ்மார்ட் போன் கேலரிக்கு ஸ்மார்ட் போன் கேலரிக்கு மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2014 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2014ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம் பிடிக்கும். எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகேஷன்களை இந்த வகையில் ஸ்கேன் செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது. தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது. புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார். ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.

கணினியின் வேகத்தை குறையாமல் பாதுகாக்க...

இன்று கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்: இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும். அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன. அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும். கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.

ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைக்க




முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும். இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard). இதனை இங்கு கிளிக் செய்து இதில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம். இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள் ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.
.
.
யாரெல்லாம் பிரிச்சி மேயபோரிங்க...

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்