புதிய வரவுகள் »

செவ்வாய், 26 ஜூலை, 2011

ஃபாக்ஸ் மியூசிக் கண்வெட்டர் (FoxTab Music Converter)

மியூசிக் கண்வெட்டர் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாது, மற்றும் 480 கேபி அளவுள்ள இந்த மென்பொருள் கணினியில் நிறுவுவதற்கு குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது. இது முற்றிலும் இலவச மென்பொருள் என்பது இதன் சிறப்பு.
Supported formats: *.mp2, *.mp3, *.aac, *.au, *.ogg, *.ape, *.flac, *.aiff, *.m4a, *.mpc, *.ac3, *.wav, *.wma1, *.wma2 இதை விண்டோஸ் எஸ்பி, விஸ்டா மற்றும் ஏழிலும் இயங்குகிறது. மென்பொருளை தரவிரக்கம் செய்ய (இங்கே சொடுக்கவும்).

கர்சருடன் கூடிய நேரம்

கர்சர் முனையிலேயே கடிகாரம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உங்களுக்காகவே டைம் கர்சர் மென்பொருள் பயன்படுகிறது. 700கேபி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய (இங்கே சொடுக்கவும்) பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு அதற்கான ஐகான் டாஸ்க்பாரில் வந்து அமர்ந்து கொள்ளும்.
இதில் கடிகாரத்தின் நிறத்தையும் நேரத்தின் அளவினையும் பயனாளரே முடிவு செய்யலாம். அதைப்போலவே நிமிடத்தையும், கர்சருக்கு இடது வலது புறத்தையும் முடிவு செய்யலாம். எழுத்துரு தடிமனாக தேவையென்றாலும் அமைத்துக்கொள்ளலாம். இனி நீங்கள் எந்த அப்ளிகேஷனை திறந்தாலும் கர்சர் கூடவே உங்களுக்கு நேரம் வந்தவிடும்.

மடிக்கணினி வைத்திருப்பர்கள் கவனத்திற்கு...


மடிக்கணினி வாங்கி மிகப் பழையதாக ஆகும்போது அதன் தொடக்க இயக்கம் (ஸ்டார்ட் அப்) மட்டுமின்றி பயன் பாடுகளின் இயக்கமும் மிகமெதுவாகவே நடைபெறும்.
உடன் மின்சாரம் வழங்கும் பேட்டரியை மாற்றினால் சரியாக இருக்கும் என ஆயிரக்கணக்கான பயனாளர்கள் கைவசமிருக்கும் பேட்டரியை பயன் படுத்தாமல், புதிய பேட்டரியை வாங்கி பொருத்திக் கொள்வார்கள். அவ்வாறு செய்யாமல் பின்வரும் படிமுறைகளை பின்பற்றி பேட்டரியை புத்தாக்ககம் செய்து புதிய பேட்டரியை போன்றே பயன்படுத்தி கொள்ள முடியும்.
1. மடிக்ணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம் செய்யுங்கள்.
2. பின்னர் மின்தொடர்பை துண்டித்து விட்டு மடிக்கணினியை பேட்டரியின் மின்சாரம் முழுவதுமாக காலியாகும்வரை பயன்படுத்துங்கள். பேட்டரியின் மின்சாரம் முழுவதும் காலியாகும் நிலையில் நாம் செய்து வந்த செயல்களை சேமித்து கொண்டு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்யவும்.
3. இதேநிலையில் சுமார் 5 அல்லது 6 மணிநேரம் அதிகபட்சம் ஒரு இரவு முழுவதும் மடிக்கணினியை இயக்காமலேயே வைத்திருந்து மீண்டும் மடிக்கணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம் செய்யுங்கள்.
இப்போது மடிக்கணினியை இயங்க செய்துவழக்கமான நம்முடைய செயல்களை செய்யலாம். இதன் மூலம் மடிக்கணினியின் பேட்டரியின் திறன்புத்தாக்கம் பெறுகின்றது. இவ்வாறாகன செயலை அவ்வபோது செய்து பேட்டரியின் வாழ்நாளை கூடுதலாக்கி பயன்படுத்த முடியும்.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்