இன்று கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்: இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும். அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன. அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும். கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.
புதிய வரவுகள் »
செவ்வாய், 14 ஜனவரி, 2014
ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைக்க

முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும். இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard). இதனை இங்கு கிளிக் செய்து இதில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம். இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள் ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.
.
.
யாரெல்லாம் பிரிச்சி மேயபோரிங்க...
சனி, 28 செப்டம்பர், 2013
இலவசமாக IDM (INTERNET DOWNLOAD MANAGER) புதிய பதிப்பு !!
இணையத்தில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம் . அது படங்களாக , பாடலாக , கோப்புகளாக கூட இருக்கலாம் . இவை அனைத்தையும் மிக எளிதில் தரவிறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM
பயன்கள் :
- வேகமாக தரவிறக்கலாம்
- வேண்டும் பொழுது PAUSE செய்யலாம் .
- பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கலாம்
- தானாகவே UBDATE ஆகும் .
- FIREFOX உடன் தானாகவே Integrate ஆகிவிடும் . இதனால் விடியோ , ஆடியோ பைகளில் தானாகவே டவுன்லோட் பட்டன் இணைந்துவிடும் .
IDM புதிய பதிப்பை DOWNLOAD செய்ய :
CRACK தரவிறக்கம் செய்ய :
SERIAL KEY தரவிறக்கம் செய்ய :
வாழ்நாள் முழுவதும் இலவசமாக மாற்ற :
- CRACK பைலை டவுன்லோட் செய்து அதை காப்பி செய்துகொள்ளவும் . C:\PROGRAMFILES\INTERNET DOWNLOAD MANAGER என்ற போல்டரில் PASTE செய்யவும் . FILE OVERWRITE செய்யலாமா என மெசேஜ் வரும் YES என குடுக்கவும் .
- IDM ஓபன் செய்து அதில் Registration மெனுவில் Registrationபகுதியில் மேலே உள்ள SERIAL KEY FILE இல் உள்ள KEY யை பயன்படுத்தவும் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


