புதிய வரவுகள் »

வெள்ளி, 1 அக்டோபர், 2010

உங்கள் வலைப்பூ பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவாக்க

நாம் எழுதும் ஏதாவது ஒரு பதிவு ஏதோ பத்திரிகையிலோ அல்லது புத்தகத்திலோ வந்தால் எவ்வளவு சந்தோசப்படுவோம். நம்முடையை அனைத்து பதிவுகளையும் அப்படியே ஒன்றாக புத்தகமாக வெளியிட்டால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. நம் பதிவுகள் அனைத்தையும் எப்படி நாம் புத்தகமாக உருவாக்குவது என்றே இங்கு காணபோகிறோம்.

இதற்க்கு முதலில் உங்கள் வலைப்பூ அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.பின்பு Dassboard- Settings – Site feed – Full- Save Settings -என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

இந்த சேவையை நமக்கு ஒரு வலைத்தளம் செய்கிறது. இந்த தளத்தில் நம் புத்தகத்தை உருவாக்கும் வரை இலவசமே. ஆனால் அதை டவுன் லோட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் க்ளிக் BLOG2PRINT செய்யவும்.

இந்த தளம் சென்ற உடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் இதில் உங்களுடைய வலைப்பூவின் முகவரியை கொடுத்து Print My Blog என்ற அருகில் இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுடைய பிளாக் ஸ்கேன் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.

  • Include Posts: இந்த இடத்தில் உங்களுக்கு எத்தனை பதிவுகள் புத்தகமாகக வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொள்ளவவும். (ALL POSTS செலக்ட் செய்ய வேண்டாம் சில சமயம் சரியாக இயங்கவில்லை.)
  • Labels: இதில் உங்கள் பதிவுகளை நீங்கள் உங்கள் labels வகையில் வகை படுத்தலாம்.
  • Comments: நம் பதிவை படித்துவிட்டு வாசகர்கள் கூறும் கமென்ட் ஆக்டிவேட் செய்ய.
  • Page Template: இந்த இடத்தில் நீங்கள் Compact செலக்ட் செய்வதே சிறந்தது.
  • Order of Posts: உங்களின் பதிவுகள் வரிசை படுத்த.

அடுத்து COVERS என்ற பகுதி இருக்கும். இதில் உங்கள் புத்தகத்தின் அட்டை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

அடுத்து உள்ள DEDICATION என்ற இடத்தில் உங்கள் புத்தகத்தின் ஏதேனும் முன்னுரையை கொடுத்து கீழே உள்ள CREATE MY BOOK என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் உங்கள் புத்தகம் தயாராகி கொண்டிருக்கிறது. சிறிது நேரம் காத்திருக்கவும். முடிவில் உங்கள் புத்தகம் தயாராகி வரும்.

தேவைபட்டால் நீங்கள் அங்கே கொடுக்கபட்டிரும் விலை பட்டியலில் சொடுக்கி உங்கள் புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

குறோம் (Chrome): வெளிவந்துவிட்டது Mac மற்றும் Linuxக்கான பதிப்பு

clip_image002

கூகில் தனது "Chrome" எனும் உலாவியை Linux மற்றும் Mac OS வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் அவ் நிறுவணம் சிறு எச்சரிக்கையை கவணத்தில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளது.

இந்த பதிப்பு இன்னும் ஸ்தரமற்று இருப்பதால் நாளாந்த பவணைக்கு ஏற்றதள்ள. இது தற்சமயம் பரீட்சை பார்க்கும் நபர்களே பாவிப்பது சிறந்தது.

இதில் சில பயண்பாடுகளை பயண்படுத்த முடியாது. உதாரணமாக Print செய்வதற்க்கான வசதி இல்லை. Adobe Flash அல்லது Plug-Ins போன்றவைகளை பயண்படுத்த முடியவில்லை. ஏனவே YouTube போன்றவற்றை பார்க்க முடியவில்லை.

பவணையாளர்கள் தரும் கருத்துக்கள், மற்றும் பிழைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை வைத்தே முழுமையான பதிப்பு வெளியிடப்படும்.

தறவிறக்கம் செய்ய மேலே உள்ள படத்தில் சொடுக்கவும்.

உபுண்டு (Ubuntu) 10.04: 10 விணாடிக்குள் ஆரம்பிக்கும் (Start)

clip_image001

ஏப்பிரல் 2010தில் வரப்போவதாக அறிவிக்கப்பட்ட Linux – Distribution Ubuntu பதிப்பு எண்10.04 வெறும் பத்தே விணாடிக்குள் ஆரம்பித்துவிடும். Ubuntu தயாரிப்பாளரான Scott James இதை அறியத்தந்துள்ளார்.

இந்த இலக்கை Dell Mini9 என்னும் netbookகில் வெற்றிகரமாக பரீசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இந்த netbook பலவீணமான Atom-Prozessor(முறைவழியாக்கி) மற்றும் வேகமான (SSD) வன்வட்டு (Hard disk) பொருத்தப்பட்ட இந்த கணினி பரிசோதிப்பதற்க்கு பொறுத்தமான கருவியாக உள்ளது.

இந்த அறிக்கையை அவ் நிறுவனம் வெளியிடும்போது, 10 விணாடிக்குள் பாவணையாளர் தன் அதில் வேளைசெய்ய அரம்பித்துவிடலாம்.

ஆக்டோபர் 2009 வரவுள்ள Ubuntu-Version 9.10 "Karmic Koala"வும் இதுபோன்றே 10 விணாடிக்குள் ஆரம்பித்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

தறவிறக்கம் செய்ய மேலே உள்ள படத்தில் சொடுக்கவும்

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்