புதிய வரவுகள் »

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

      நாம் பயன் படுத்தும் ஆவணங்களை பாதுகாப்பாக மறைத்து வைக்க வின்மென்ட் என்ற இலவச மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவியதும் தோன்றும் விண்டோவில் நாம் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் 6 முதல் 15 எண் மற்றும் எழுத்துகளை கடவுச் சொற்களாக வைத்துக் கொள்ளுங்கள். இதில் உள் நுழைந்ததும் ஆவணங்களை மறைப்பதற்கும், போல்டர்களை மறைப்பதற்கு என தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் பட்டன்களைப் பயன்படுத்தி தேவையான ஃபோல்டர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
      அவ்வாறு தேர்ந்தெடுத்த கோப்புகள் அல்லது ஆவணங்கள் அந்த விண்டோவில் ஹிட்டன் எனக் குறிப்பிட்டிருக்கும் ஆவணங்கள் அல்லது கோப்புகள், அந்த டிரைவில் சென்று பார்த்தால் மறைக்கப்பட்டிருக்கும். மறுபடியும் தேவைப்படும் நேரத்தில் அந்த ஆவணங்களைப் பெற, டெஸ்க்டாப்பில் இருக்கும் வின்மென்ட் மென்பொருளை திறந்து கடவுச்சொல் கொடுத்து பிறகு தோன்றும் திரையின் இடது பக்க பாக்ஸில் தேவையான ஆவணங்களைத் தேர்வு மற்றும் அன்ஹைடு செய்து மீண்டும் தோன்ற செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

மாணவர் ஸ்பெஸல்.....! Tamil Diction

ஆங்கிலத்தில் பேசவும் அதன் இலக்கணத்தை கற்கவும் பயன்படும் இந்த தளத்தில் எளிமையான முறையில் ஆங்கில இலக்கணமுறைகள், பேச்சு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்பு மாணவர்களும் புரிந்து கொண்டு செயல்படுத்தும்விதமாக ஆங்கில மொழியின் இலக்கணங்களும் அதற்கான விளக்கங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் போட்டித் தேர்வர்கள் அனைவருக்கும் தேவைப்படக்கூடிய விரிவாக்கங்கள், தமிழில் பொது அறிவுக் கேள்வி பதில்கள், எதிர் சொற்கள் மற்றும் குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், எண் கணிதம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாடங்கள் ஆங்கிலத்தில் காணப்படும் போது ரீட் இன் தமிழ் என்று காணப்படக் கூடிய எழுத்தில் கிளிக் செய்து தமிழில் பாடங்களைப் படிக்கலாம். சில பகுதிகளை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இந்த தளத்திற்கு செல்ல இங்க சொடுக்கவும்.

புதன், 31 ஜூலை, 2013

ஃபோட்டோ ஸ்கேப் 3.65 (புதியது)

   போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான இன்னொரு மென் பொருளைச் சொல்வது கடினம். ஆனால், போட்டோஷாப்புக்கு ஓரளவு மாற்றாக பயன்படுத்தப்படும் இலவச மென்பொருள் ஃபோட்டோஸ்கேப் ஆகும்.
    இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி ஃபோட்டோ ஸ்கேப் 3.65 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஃபோட்டோஷாப் போல பிம்பங்களை வண்ணம் மாற்றலாம். வண்ணப் பிம்பத்தை சாம்பல் (கிரே) நிறத்திற்கு மாற்றலாம். பல்வேறு ஃபில்டர் களையும் எஃபக்ட்களையும் பயன் படுத்தி, பிம்பங்களை மெருகேற்றலாம்.

பல்லடுக்கு பிம்பங்களை (மல்டிபிள் ஃபோட்டோஸ்) இணைத்து சிறிய அனிமேட்டட் காட்சிகளை உருவாக்கலாம். எளிதாகவும் வேடிக்கையாகவும் பிம்பங்களை மெருகேற்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. 21 எம்.பி கொள்ளவு கொண்ட ஃபோட்டோஸ்கேப்பை பழைய பென்டியம் கணினிகளில் கூட விரைவாக இயங்குகிறது என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
தரவிறக்கம் செய்ய  இந்த தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்