அட போங்கய்யா கூகுலைவிட சிறந்த தேடுபொறியா? எத்தனை முறை இதே வர்ணனையை கேட்டு ஏமாந்திருக்கிறோம் என அலுத்து கொள்பவர்கள் கவனிக்க உண்மையிலேயே சூப்பர் தேடுபொறி இது என்பதை உறுதியாக சொல்லலாம்.
டக்டக்கோ என்னும் விநோதமான பெயர் கொண்ட அந்த புதிய தேடுபொறி உண்மையிலேயே கூகுலுக்கு மாற்றாக விளங்க கூடிய ஆற்றலை பெற்றிருக்கிறது.
இணைய உலகில் சற்றேரக்குறைய இரண்டாயிரத்துக்கும் அதிகமான தேடுபொறிகள் உள்ளன. இவற்றில் பல அறிமுகமாகும் போது கூகுலுக்கு மாற்று என வர்ணித்துக்கொள்வது வழக்கம் தான்.ஒரு சில தேடுபொறிகளை அடுத்த கூகுல் என்று பத்திரிகைகள் வர்ணிப்பதும் வழக்கம்.ஆனால் இதுவரை எந்த தேடுபொறியாலும் கூகுலை ஒரங்கட்ட முடியவில்லை.
முன்னால் கூகுலர்களால் ஆரம்பிக்கப்பட்ட குயில்(cuil) தேடுபொறி கூட இப்படி தான் கூகுலுக்கான சவால் என்று அழைக்கப்பட்டு ஏக பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியாமல் போய் இப்போது விக்கிபீடியா பாணியில் களஞ்சிய தேடுபொறியாக தன்னை உருமாற்றி கொண்டுள்ளது.
தேடியந்திர வரலாற்றை அறிந்தவர்கள் புதிய தேடியந்திரங்கள் வரும் போகும் ஆனால் கூகுல் எல்லோராலும் நாடப்படும் தேடுபொறியாக தொடரும் என்பதை அறிந்தேயிருப்பார்கள். அதிலும் சாமன்ய இணையவாசிகளை பொருத்தவரை தேடல் என்றால் கூகுல் தான்.
கூகுல் அதன் வேலையை ஒழுங்காக செய்கிறது என்பதும் அதனை மிஞ்சக்கூடிய தொழில்நுட்பம் இன்னும் சாத்தியமாகவில்லை என்னும் நிலையில் இன்னுமொரு தேடுபொறியாக உதயமாகியுள்ள டக்டக்கோ மாறுபட்ட தேடுபொறி என்னும் உணர்வை முதல் பார்வையிலேயே தந்து வியக்க வைக்கிறது.
கூகுலைப்போலவே இன்னொரு தேடுபொறி என்று தன்னை மற்றி அடக்கமாகவே கூறிக்கொள்ளும் டக்டக்கோ கூகுலுக்கு பதிலாக ஏன் தன்னை முயன்று பார்ப்பதற்கு என்று நெத்தியடியாக சில காரணங்களை பட்டியலிடுகிறது.
கூகுலை விட சிக்கல் இல்லாத தேடல் பக்கம்,விளம்பர இடையூறு இல்லாத தேடல் முடிவுகள் ,சிறப்பான குறுக்கு வழிகள் என நீளும் அந்த பட்டியலில் உண்மையிலேயே நெத்தியடியான அமசம் சுழிய சொடுக்கும் வசதியாகும். சுழிய கிளிக் என குறிப்பிடப்படும் இந்த வசதியை சொடுக்காமலேயே தேடுவது என புரிந்து கொள்ளலாம்.
அதெப்படி கிளிக் சொடுக்காமலேயே தேடுவது சாத்தியமா? வழக்கமாக தேடும் போது என்ன செய்வோம். கீவேர்டை டைப் செய்துவிட்டு தேடு என கட்டளையிடுவது போல என்டர் தட்டுவோம் அல்லவா?அதன் பிறகு தேடல் முடிவுகள் வந்து நிற்கும் அல்லவா?அதில் ஏதாவது ஒன்றை கிளீக் செய்தால் தான் தேவிஅயான் தகவல்களை பெற முடியும். ஆனால் டக்டக்கோ தேடியந்திரமோ கிளிக் செய்ததுமே தேடப்படும் பதம் தொடர்பான அறிமுக குறிப்புகளாக சில தகவல்கலை அளிக்கிறது.
இந்த குறிப்புகள் மிகச்சரியாக தேடப்படும் பொருள் குறித்த சரியான அறிமுகமாக அமைந்து விடுகிறது.உதாரனத்திற்கு பிரெஞ்சு ஒபன் என் தேடினால் பாரிசில் மே மாதம் துவங்கி நடைபெறும் டென்னிஸ் போட்டி என்ற அறிமுகம் கிடைக்கிறது.பல நேரஙக்ளில் தேடப்படும் பொருளை புரிந்து கொள்ள இந்த அறிமுகம் உதவலாம். சில நேரங்களில் இந்த அறிமுகமே கூட போதுமாக இருக்கலாம்.புதிய பொருள் குறித்து மிக அவசரமாக தேடும் போது அறிமுக குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
விக்கிபீடியா போன்ற தளங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் கூட இந்த அறிமுகம் பயனுள்ளதாகவே இருக்கிறது.விரிவான தேடல் தேவை என்றால் பக்கவாட்டில் உள்ள வசதியை துணைக்கு அழைத்து யூடியூப் உடபட பல இடங்களில் தேட முடியும்.
இந்த தேடுபொறியில் கூகுல் என டைப் செய்து பார்த்தால் கூகுல் என்றால் பல அந்ததம் உண்டு உங்களுக்கு எது வேண்டும் என்று கேட்கப்படு அதன் கீழேயே கூகுல் என்றால் தேடியந்திரம் என்ற அறிமுகமும் இடம் பெறுகிறது.பலவித அர்த்தங்களில் ஒன்றாக கூகுல் என முடியும் பெயர் கொண்டவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்த அமசத்திற்காக நிச்சயம் இதனை பயன்படுத்தி பார்க்கலாம்.இதனை தவிர தேடல் பக்கம் கூகுலைவிட தெளிவானதாக சிக்கலில்லாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே போல தேடல் வரலாற்றை சேமித்து வைப்பதில்லை என்றும் குறிப்டப்பட்டூள்ளது.
இந்த அமசங்கள் எல்லாவற்றையும் கூகுலோடு ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேல் இத முகப்பு பக்கம் வண்ணமயமாக வாத்து மற்றும் இதர ஐகான்களோடு அழகாகவே இருக்கிறது.அதோடு கூகுலில் இருக்கும் அதிர்ஷ்ட தேடல் வசதியை போல (ஐஅய்ம் பீலிங் லக்கி) ஐயம் பீலிங் டக்கி என்னும் கூடுதல் வசதியும் உண்டு.
——–
0 கருத்துகள்:
கருத்துரையிடுக