கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர், இப்போது தங்களுடைய பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க, அடோப் பிடிஎப் ரீடருக்குப் பதிலாக, வேறு பி.டி.எப். ரீடர்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதற்குக் காரணம், பல வைரஸ் புரோகிராம்கள், அடோப் நிறுவன அப்ளிகேஷன் புரோகிராம்களைக், குறிப்பாக அடோப் பி.டி.எப். ரீடர் தொகுப்பினைப் பயன்படுத்தியதுதான். இதற்கு வேறு காரணங்களும் இருந்தன. இந்த புரோகிராம்களில், பிடிஎப் பைல்கள் வேகமாக இறங்கின. சிறப்பான கூடுதல் வசதிகளும் தரப்பட்டன. இவற்றில் பிரபலமானவை பாக்ஸ்இட் ரீடர், சுமத்ரா மற்றும் பிடிஎப் எக்சேஞ்ச் வியூவர் ஆகும்.
அண்மையில் இன்னுமொரு பிடிஎப் ரீடர் தொகுப்பினைக் காண நேர்ந்தது. இதன் பெயர் நிட்ரோ பிடிஎப் ரீடர் (Nitro PDF Reader). இதுவும் மற்ற பிடிஎப் ரீடர்களைப் போல இலவசமாகவே கிடைக்கிறது. இது மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகவே இயங்குகிறது. இதில் தரப்படும் எடிட்டிங் மற்றும் சேவிங் வசதிகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது.இதன் அனைத்து ஆப்ஷன்களும், அதன் ஹெடரிலேயே தரப்பட்டுள்ளதால், அவற்றை அணுகிப் பெறுவது எளிதாகிறது.இதில் எடிட் செய்யப்படும் பிடிஎப் பைல்கள், மற்ற பிடிஎப் ரீடர் புரோகிராமிலும் படிக்க முடிகிறது. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் இயக்கத் தொகுப்புகளுக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. அவசியம் இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
புதிய வரவுகள் »
புதன், 14 ஜூலை, 2010
நிட்ரோ பி.டி.எப். ரீடர் (Nitro PDF Reader)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக