அதிவேக டேட்டா பரிமாற்றத்திற்கு துணைபுரியும் தொழில்நுட்பம் வந்துவிட்டது யுஎஸ்பி 3.0. ஏற்கனவே அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் யுஎஸ்பி 2.0 தொழிநுட்பம் சுமார் 480எம்பி/நொடி என்ற விகிதத்திலேயே பலதரப்பட்ட எலக்ட்ரானிக் மற்றும் கணினி துணைக்கருவிகளை இணைத்து பயன் படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யுஎஸ்பி 2.0 முற்றிலும் மேம்படுத்தப்பட்டு அதன் வேகம் சுமார் 5 ஜிபி/நொடி என்ற விகிதத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு யுஎஸ்பி 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற பயனாளர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட யுஎஸ்பி 3.0 தொழிற்நுட்ப கருவி அனைவரது பார்வைக்கும் வைக்கப்பட்டு சுமார் 20 மில்லியன் கருவிகள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. யுஎஸ்பி நிறுவுபவர்களின் அமைப்பின் தலைவர் திரு.ஜெப் ராவன்கிராப்ட், கணினியுகத்தில் யுஎஸ்பி 3.0 வெற்றிபெற்ற இணைப்பு பாலமாகத் திகழ்கிறது எனத் தெரிவிக்கிறார்.
ஏற்கனவே பயன்படுத்தி வந்த மின் தேவையைவிட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தேவைப்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொழில் நுட்பம் தகவல் பரிமாற்ற கட்டமைப்பையும் சிறப்பாக மேம்படுத்தியுள்ளது.
இதற்கென, தனிப்பட்ட சார்ஜர் அமைப்புகள் தேவைப்படாது; மற்றும் 900 மில்லி ஆம்ப்ஸ் மின்சாரமும் 2.0 கருவிகளும் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டது. ஒயர்லெஸ் மற்றும் ஆர்எஸ்-232 சீரியல் கம்யூனிகேஷன் போர்ட்டை பயன்படுத்துவதை விடுத்து யுஎஸ்பி 3.0 பயன்பாடு அதிகரித்துள்ளது.
மைக்ரோசிப், ஐபேடு போன்ற புகழ்பெற்ற கருவி தயாரிப்பாளர்கள் யுஎஸ்பி 3.0 வை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

1 கருத்துகள்:
Hello sir,
can we use any labtop, Pc etc? can you tell me how we can use either there is port in those or we have to fix any additional port like sound card, external devise
கருத்துரையிடுக