கூகுள் நிறுவனம் குறுகிய கால இடைவெளியில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. நாள்தோறும் பல மாற்றங்களோடு பல சேவைகளை அள்ளி விடும் கூகுள் நிறுவனத்தின் படைப்புகளில் இருந்து அண்மையில் வெளிவந்த அசத்தலான 3 புதிய வசதிகள்
1. கூகுள் குரல் தேடல் ( GOOGLE VOICE SEARCH )
செல்பேசிகளில் பயன்பட்ட இந்த தேடல் முறை இப்போது கூகுள் குரோமில் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் சொற்களை உச்சரிப்பதன் மூலம் தேடித் தருகிறது. தற்போது இந்த வசதி கூகுள் குரோமில் மட்டுமே உள்ளது. உங்கள் மைக்ரோ ஃபோனை தயார் செய்துகொண்டு மைக் பட்டன் கிளிக் செய்தால் SPEAKNOW என தோன்றும், அப்போது நீங்கள் தேடும் சொல்லின் சொல்லை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கான தேடல் தொடங்கும்.
2. தமிழ் மொழி பெயர்ப்பு ( TAMIL GOOGLE TRANSLATE )ஆங்கில மற்றும பிற மொரியில் உள்ள தகவல்களை அப்படியே தமிழுக்கு மொழிமாற்றம் செய்துகொள்ளக் கூடிய வசதியினை அளித்துள்ளது. இதன் மூலம் ஆங்கில மற்றும் பிற மொழி உரைகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய முடியும்.
3. படத்தேடல் ( IMAGE SERCH )
ஒளிப்படங்களைக் கொடுத்து தேடினால் அதற்கு ஒப்பான ஒளிப்படங்களையும் அவை உள்ள தளங்களையும் காண்பிக்கிறது. இதன் மூலம் உங்கள் படங்கள் எங்கு உள்ளன என கண்டுகொள்ள முடியும்.
இந்த வசதியினை பெற கூகுள் இமேஜ் தேடுபக்கத்தில் சென்று, தேடும் பெட்டியில் உள்ள கேமரா பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும். அதில் நீங்கள் தேட விரும்பும் படத்தினை UPLOAD செய்தால் நீங்கள் வழங்கிய படத்திற்கு ஒப்பான படங்களை பெறுவதுடன் அவை எந்த தளங்களில் உள்ளன என அறிந்துகொள்ள முடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக