வேர்டில் புதியவர்களுக்கு.... வேர்டு தொகுப்பில் டாக்குமென்ட்களை உருவாக்குகையில், முதல் பக்கத்தில் பக்க எண் காட்டப்படுவதையோ, அச்சிடப்படுவதையோ பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் பக்க எண் ஃபார்மெட் செய்யப்படுகையில் முதல் பக்கத்தில் அது காட்டப்படும். இதனை மட்டும் எப்படி மறைக்கலாம் என்று பார்ப்போம்.முதலில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண் காட்டப்படுவதை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம். வேர்டு 2007 மற்றும் வேர்டு 2010 தொகுப்புகளில், டாக்குமென்ட்டைத் திறந்து, அதில் ஹெடர் அண்ட் ஃபுட்டர் என்னும் பிரிவில் இரட்டைக் கிளிக் செய்திடவும். பின்னர், இந்தக்குழுவில், Page Number என்பதில் கிளிக் செய்து, அது தோன்றும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்டு 2003 தொகுப்பில், Header and Footer மீது இரட்டை கிளிக் செய்திடவும். அல்லது View மெனு சென்று கிடைக்கும் மெனுவில் ஹெடர் அண்ட் ஃபுட்டர் தேர்ந்தெடுத்துப் பெறவும். இப்போது கிடைக்கும் ஹெடர் அண்ட் ஃபுட்டர் டூல் பாரில் Insert Page Number என்பதில் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் மற்ற டூல்களையும் பயன்படுத்தி இதனை ஒழுங்குபடுத்தலாம்.
இனி கீழ்க்கண்ட வழிகளில், முதல் பக்கத்தில் தோன்றும் எண்ணை நீக்கலாம். வேர்டு 2007 மற்றும் 2010 தொகுப்புகளில், Page Lay Out டேபினைக் கிளிக் செய்திடவும். அடுத்து, வலது கீழாக உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து Page Set Up குருப் டயலாக் பாக்சினைக் கொண்டு வரவும். பின்னர் Lay Out டேபினைக் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Header and Footer பிரிவில் Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்டு 2003 தொகுப்பில், ஹெடர் அண்ட் ஃபுட்டர் டூல்பாரில், பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்கவும். இங்கு Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி முதல் பக்கத்தில் பக்கஎண் காட்டப்படமாட்டாது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக