புதிய வரவுகள் »

புதன், 14 செப்டம்பர், 2011

பீடிஎஃப் ஃபைலை பிரிக்க, இணைக்க... PDF Splitter Merger

இன்றைய கணினி பயன்பாட்டாளர்கள் பீடிஎஃப் ஃபைல்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. சில பீடிஎஃப் ஃபைல்களில் சில பக்கங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். அதுபோல சில பக்கங்களை நீக்க வேண்டி இருக்கும். சில பீடிஎஃப் ஃபைல்களை ஒன்று சேர்த்து ஒரே பீடிஎஃப் ஃபைலாக மாற்ற வேண்டி இருக்கும். இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்க்கில் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.இதில் ADD பட்டனை கிளிக் செய்தோ டிராப் செய்தோ பீடிஎஃப் ஃபைல்களை கொண்டு வரலாம். இதில் குறிப்பிட்ட பக்கத்தை நீக்க, சேர்க்க, பிரிக்க என பல வசதிகள் உள்ளது. நீங்கள் பக்க எண் மட்டும் கொடுத்தால் போதுமானது.
ஒற்றை பக்க எண்களிலோ, இரட்டை பக்க எண்களிலோ எதை வேண்டுமானாலும் நீக்கவோ, சேர்க்கவோ, பிரிக்கவோ செய்யலாம். இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பீடிஎஃப் ஃபைல்களை ஒரே ஃபைலாக மாற்றி விடலாம். நீங்கள் பக்க வரிசைப்படி பிரித்து விடலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறு செய்து பின்னர் கீழே உள்ள டேக் ஆப்ஷன் கிளிக் செய்தால் போதுமானது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பயாஸ் BIOS - Basic Input Output System

கணினி பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டோ போகிறது. பலரும் கணினியில் பயாஸ் என்ற வார்த்தையை கேள்வி பட்டிருப்பதோடு சரி பயாஸ் என்றால் என்ன என்று தெரியாது.
பயாஸ் BIOS - Basic Input Output System
இது அனைத்து கணினிகளின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்டு டிஸ்க் மற்றும் கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கணினிக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஸ்கிரீன், ஹார்டு டிஸ்க் மற்றும் கீ போர்டு போன்ற தேவையான சாதனங்கள் அனைத்தும் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை தேடிப்பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லையென்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

தற்காலிக ஃபைல்களை தானே டெலிட் ஆக... Automatically Delete Temp Files 7.0

நமது கணினியில் அடிக்கடி சேரும் தற்காலிக (டெம்ப்ரவரி) ஃபைல்களை உடனுக்குடன் நீக்கி விட்டால் நமது கணினி வேகமாக செயல் படும். அதற்க்கான மென்பொருல்தான் இந்த ஆட்டோமெட்டிக் டெலிட் டெம்ப்ரவரி பைல். இதனை தரவிரக்கம் செய்து கணினியில் நிறுவியதும் விண்டோ திறக்கும். இதில் உங்கள் டெம்ப்ரவரி ஃபைல்களை ஒரு மணிநேரம் முதல் ஒரு வாரம் வரை நேரத்தை செட் செய்து விட்டால் நமது கணினியில் சேரும் டெம்ப்ரவரி ஃபைல்களை ரீ சைக்கிள் பின்னில் உள்ள ஃபைல்கள் என அனைத்தையும் அதுவே டெலிட் செய்துவிடும். உங்கள் தேவைக்கு ஏற்ப நேரத்தை செட் செய்துவிட்டால் போதும். இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்