புதிய வரவுகள் »

புதன், 14 செப்டம்பர், 2011

பீடிஎஃப் ஃபைலை பிரிக்க, இணைக்க... PDF Splitter Merger

இன்றைய கணினி பயன்பாட்டாளர்கள் பீடிஎஃப் ஃபைல்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. சில பீடிஎஃப் ஃபைல்களில் சில பக்கங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். அதுபோல சில பக்கங்களை நீக்க வேண்டி இருக்கும். சில பீடிஎஃப் ஃபைல்களை ஒன்று சேர்த்து ஒரே பீடிஎஃப் ஃபைலாக மாற்ற வேண்டி இருக்கும். இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்க்கில் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.இதில் ADD பட்டனை கிளிக் செய்தோ டிராப் செய்தோ பீடிஎஃப் ஃபைல்களை கொண்டு வரலாம். இதில் குறிப்பிட்ட பக்கத்தை நீக்க, சேர்க்க, பிரிக்க என பல வசதிகள் உள்ளது. நீங்கள் பக்க எண் மட்டும் கொடுத்தால் போதுமானது.
ஒற்றை பக்க எண்களிலோ, இரட்டை பக்க எண்களிலோ எதை வேண்டுமானாலும் நீக்கவோ, சேர்க்கவோ, பிரிக்கவோ செய்யலாம். இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பீடிஎஃப் ஃபைல்களை ஒரே ஃபைலாக மாற்றி விடலாம். நீங்கள் பக்க வரிசைப்படி பிரித்து விடலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறு செய்து பின்னர் கீழே உள்ள டேக் ஆப்ஷன் கிளிக் செய்தால் போதுமானது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

0 கருத்துகள்:

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்