புதிய வரவுகள் »

புதன், 14 செப்டம்பர், 2011

பீடிஎஃப் ஃபைலை பிரிக்க, இணைக்க... PDF Splitter Merger

இன்றைய கணினி பயன்பாட்டாளர்கள் பீடிஎஃப் ஃபைல்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. சில பீடிஎஃப் ஃபைல்களில் சில பக்கங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். அதுபோல சில பக்கங்களை நீக்க வேண்டி இருக்கும். சில பீடிஎஃப் ஃபைல்களை ஒன்று சேர்த்து ஒரே பீடிஎஃப் ஃபைலாக மாற்ற வேண்டி இருக்கும். இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்க்கில் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.இதில் ADD பட்டனை கிளிக் செய்தோ டிராப் செய்தோ பீடிஎஃப் ஃபைல்களை கொண்டு வரலாம். இதில் குறிப்பிட்ட பக்கத்தை நீக்க, சேர்க்க, பிரிக்க என பல வசதிகள் உள்ளது. நீங்கள் பக்க எண் மட்டும் கொடுத்தால் போதுமானது.
ஒற்றை பக்க எண்களிலோ, இரட்டை பக்க எண்களிலோ எதை வேண்டுமானாலும் நீக்கவோ, சேர்க்கவோ, பிரிக்கவோ செய்யலாம். இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பீடிஎஃப் ஃபைல்களை ஒரே ஃபைலாக மாற்றி விடலாம். நீங்கள் பக்க வரிசைப்படி பிரித்து விடலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறு செய்து பின்னர் கீழே உள்ள டேக் ஆப்ஷன் கிளிக் செய்தால் போதுமானது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பயாஸ் BIOS - Basic Input Output System

கணினி பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டோ போகிறது. பலரும் கணினியில் பயாஸ் என்ற வார்த்தையை கேள்வி பட்டிருப்பதோடு சரி பயாஸ் என்றால் என்ன என்று தெரியாது.
பயாஸ் BIOS - Basic Input Output System
இது அனைத்து கணினிகளின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்டு டிஸ்க் மற்றும் கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கணினிக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஸ்கிரீன், ஹார்டு டிஸ்க் மற்றும் கீ போர்டு போன்ற தேவையான சாதனங்கள் அனைத்தும் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை தேடிப்பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லையென்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

தற்காலிக ஃபைல்களை தானே டெலிட் ஆக... Automatically Delete Temp Files 7.0

நமது கணினியில் அடிக்கடி சேரும் தற்காலிக (டெம்ப்ரவரி) ஃபைல்களை உடனுக்குடன் நீக்கி விட்டால் நமது கணினி வேகமாக செயல் படும். அதற்க்கான மென்பொருல்தான் இந்த ஆட்டோமெட்டிக் டெலிட் டெம்ப்ரவரி பைல். இதனை தரவிரக்கம் செய்து கணினியில் நிறுவியதும் விண்டோ திறக்கும். இதில் உங்கள் டெம்ப்ரவரி ஃபைல்களை ஒரு மணிநேரம் முதல் ஒரு வாரம் வரை நேரத்தை செட் செய்து விட்டால் நமது கணினியில் சேரும் டெம்ப்ரவரி ஃபைல்களை ரீ சைக்கிள் பின்னில் உள்ள ஃபைல்கள் என அனைத்தையும் அதுவே டெலிட் செய்துவிடும். உங்கள் தேவைக்கு ஏற்ப நேரத்தை செட் செய்துவிட்டால் போதும். இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

TrIDNet - File Identifier பைல் ஐடின்டிஃபையர்

பைல் ஐடின்டிஃபையர் மென்பொருள் நமது கணினியில் உள்ள கோப்புகளின் ஃபார்மெட்டை தெரிந்துகொள்ளும் மென்பொருள். நாம் வைத்துள்ள ஃபார்மெட் தெரியாத பைல்களின் ஃபார்மெட்டை தெறிந்துகொள்ளவும் அந்த பைலை எந்த மென்பொருளின் உதவியுடன் திறக்கமுடியும் என்ற விபரத்தையும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளை பற்றி தெரிந்துகொள்ளவும் தரவிறக்கம் செய்யவும் இங்கே சொடுக்கவும்.

திங்கள், 5 செப்டம்பர், 2011

கோட்டோவியம் வரைய அவுட் லைனர்

கணிப்போர்ரியில் நாம் நிறுவியுள்ள கோரல்டிரா மற்றும் ஸ்ட்ரீம்லைன் என்னும் மென்பொருளை கொண்டு நமது தேவைக்கேற்ப கோட்டோவியங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.ஆனால் புதியதாக அவுட்லைனர் என்னும் சிறிய பிளக்இன் கொண்டு போட்டோ ஷாப்பில் கூட கோட்டோவியங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
அவுட்லைனர் பிளக்கினை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும், பிறகு கணிப்பொறியை அணைத்துவிட்டு மீண்டும் துவங்குங்கள். இவ்வாறு செய்தவுடன் நாம் கணினியில் நிறுவியுள்ள அவுட்லைனர் பிளாக்இன் ஃபோட்டோஷாப் பில்டர் கேலரியில் அமர்ந்துகொள்ளும். அதாவது இமேஜ் ஸ்கில் என்னும் போல்டரை திறந்தால் அதன் உள்ளே அவுட் லைனர் என்னும் பெயரில நாம் நிறுவியுள்ள பிளாக்கின் இருப்பதை காணமுடியும்.நாம் அவுட்லைனாக மாற்ற விரும்பும் ஒளிப்படத்தை திறந்து கொண்டு இமேஜ் ஸ்கிள் பிளாக்கினை அப்ளை செய்யுங்கள் அடுத்த நொடியே நாம் திறந்துள்ள ஒளிப்படம் அவுட்லைனா மாறியிருப்பதை காணலாம். மேலும் இதில் காணப்படுகின்ற டீஃபால்ட் என்னும் ஆப்ஷனைத் தவிர மற்ற ஆப்ஷன்களை கொடுத்தால் அவை படத்தின் பின்புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதைக் காணலாம். இரண்டு எம்பிக்கும் மிக குறைவாக இருக்கும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Plug-in’s installer automatically detects the following graphic host applications:

  • Adobe Photoshop 7, CS, CS2, CS3
  • Adobe Photoshop Elements 2, 3, 4, 5, 6
  • Jasc Paint Shop Pro 7, 8, 9
  • Corel Paint Shop Pro (Photo) X, X1, X2
  • Corel Photo Paint 11,12
  • Xara Xtreme
  • Microsoft Digital Image Suite 2006
  • Macromedia Fireworks 2004, 8
  • Ulead PhotoImpact 8,9,10,11,12

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

கூகுளின் புதிய வசதிகளை பயன்படுத்த.... Google Latest Tips 3

கூகுள் நிறுவனம் குறுகிய கால இடைவெளியில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. நாள்தோறும் பல மாற்றங்களோடு பல சேவைகளை அள்ளி விடும் கூகுள் நிறுவனத்தின் படைப்புகளில் இருந்து அண்மையில் வெளிவந்த அசத்தலான 3 புதிய வசதிகள்

1. கூகுள் குரல் தேடல் ( GOOGLE VOICE SEARCH )
செல்பேசிகளில் பயன்பட்ட இந்த தேடல் முறை இப்போது கூகுள் குரோமில் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் சொற்களை உச்சரிப்பதன் மூலம் தேடித் தருகிறது. தற்போது இந்த வசதி கூகுள் குரோமில் மட்டுமே உள்ளது. உங்கள் மைக்ரோ ஃபோனை தயார் செய்துகொண்டு மைக் பட்டன் கிளிக் செய்தால் SPEAKNOW என தோன்றும், அப்போது நீங்கள் தேடும் சொல்லின் சொல்லை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கான தேடல் தொடங்கும்.

2. தமிழ் மொழி பெயர்ப்பு ( TAMIL GOOGLE TRANSLATE )ஆங்கில மற்றும பிற மொரியில் உள்ள தகவல்களை அப்படியே தமிழுக்கு மொழிமாற்றம் செய்துகொள்ளக் கூடிய வசதியினை அளித்துள்ளது. இதன் மூலம் ஆங்கில மற்றும் பிற மொழி உரைகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய முடியும்.

3. படத்தேடல் ( IMAGE SERCH )
ஒளிப்படங்களைக் கொடுத்து தேடினால் அதற்கு ஒப்பான ஒளிப்படங்களையும் அவை உள்ள தளங்களையும் காண்பிக்கிறது. இதன் மூலம் உங்கள் படங்கள் எங்கு உள்ளன என கண்டுகொள்ள முடியும்.
இந்த வசதியினை பெற கூகுள் இமேஜ் தேடுபக்கத்தில் சென்று, தேடும் பெட்டியில் உள்ள கேமரா பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும். அதில் நீங்கள் தேட விரும்பும் படத்தினை UPLOAD செய்தால் நீங்கள் வழங்கிய படத்திற்கு ஒப்பான படங்களை பெறுவதுடன் அவை எந்த தளங்களில் உள்ளன என அறிந்துகொள்ள முடியும்.

முதல் பக்கத்தில் பக்க எண்ணை மறைத்திட...

வேர்டில் புதியவர்களுக்கு.... வேர்டு தொகுப்பில் டாக்குமென்ட்களை உருவாக்குகையில், முதல் பக்கத்தில் பக்க எண் காட்டப்படுவதையோ, அச்சிடப்படுவதையோ பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் பக்க எண் ஃபார்மெட் செய்யப்படுகையில் முதல் பக்கத்தில் அது காட்டப்படும். இதனை மட்டும் எப்படி மறைக்கலாம் என்று பார்ப்போம்.முதலில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண் காட்டப்படுவதை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம். வேர்டு 2007 மற்றும் வேர்டு 2010 தொகுப்புகளில், டாக்குமென்ட்டைத் திறந்து, அதில் ஹெடர் அண்ட் ஃபுட்டர் என்னும் பிரிவில் இரட்டைக் கிளிக் செய்திடவும். பின்னர், இந்தக்குழுவில், Page Number என்பதில் கிளிக் செய்து, அது தோன்றும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்டு 2003 தொகுப்பில், Header and Footer மீது இரட்டை கிளிக் செய்திடவும். அல்லது View மெனு சென்று கிடைக்கும் மெனுவில் ஹெடர் அண்ட் ஃபுட்டர் தேர்ந்தெடுத்துப் பெறவும். இப்போது கிடைக்கும் ஹெடர் அண்ட் ஃபுட்டர் டூல் பாரில் Insert Page Number என்பதில் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் மற்ற டூல்களையும் பயன்படுத்தி இதனை ஒழுங்குபடுத்தலாம்.
இனி கீழ்க்கண்ட வழிகளில், முதல் பக்கத்தில் தோன்றும் எண்ணை நீக்கலாம். வேர்டு 2007 மற்றும் 2010 தொகுப்புகளில், Page Lay Out டேபினைக் கிளிக் செய்திடவும். அடுத்து, வலது கீழாக உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து Page Set Up குருப் டயலாக் பாக்சினைக் கொண்டு வரவும். பின்னர் Lay Out டேபினைக் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Header and Footer பிரிவில் Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்டு 2003 தொகுப்பில், ஹெடர் அண்ட் ஃபுட்டர் டூல்பாரில், பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்கவும். இங்கு Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி முதல் பக்கத்தில் பக்கஎண் காட்டப்படமாட்டாது.

அதிவேக டேட்டா பரிமாற்றத்திற்கு....! USB 3.0

இந்த செய்தி பலருக்கு தெரிந்திருந்தாலும் புதியவர்களுக்காக.....
அதிவேக டேட்டா பரிமாற்றத்திற்கு துணைபுரியும் தொழில்நுட்பம் வந்துவிட்டது யுஎஸ்பி 3.0. ஏற்கனவே அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் யுஎஸ்பி 2.0 தொழிநுட்பம் சுமார் 480எம்பி/நொடி என்ற விகிதத்திலேயே பலதரப்பட்ட எலக்ட்ரானிக் மற்றும் கணினி துணைக்கருவிகளை இணைத்து பயன் படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யுஎஸ்பி 2.0 முற்றிலும் மேம்படுத்தப்பட்டு அதன் வேகம் சுமார் 5 ஜிபி/நொடி என்ற விகிதத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு யுஎஸ்பி 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற பயனாளர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட யுஎஸ்பி 3.0 தொழிற்நுட்ப கருவி அனைவரது பார்வைக்கும் வைக்கப்பட்டு சுமார் 20 மில்லியன் கருவிகள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. யுஎஸ்பி நிறுவுபவர்களின் அமைப்பின் தலைவர் திரு.ஜெப் ராவன்கிராப்ட், கணினியுகத்தில் யுஎஸ்பி 3.0 வெற்றிபெற்ற இணைப்பு பாலமாகத் திகழ்கிறது எனத் தெரிவிக்கிறார்.
ஏற்கனவே பயன்படுத்தி வந்த மின் தேவையைவிட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தேவைப்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொழில் நுட்பம் தகவல் பரிமாற்ற கட்டமைப்பையும் சிறப்பாக மேம்படுத்தியுள்ளது.
இதற்கென, தனிப்பட்ட சார்ஜர் அமைப்புகள் தேவைப்படாது; மற்றும் 900 மில்லி ஆம்ப்ஸ் மின்சாரமும் 2.0 கருவிகளும் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டது. ஒயர்லெஸ் மற்றும் ஆர்எஸ்-232 சீரியல் கம்யூனிகேஷன் போர்ட்டை பயன்படுத்துவதை விடுத்து யுஎஸ்பி 3.0 பயன்பாடு அதிகரித்துள்ளது.
மைக்ரோசிப், ஐபேடு போன்ற புகழ்பெற்ற கருவி தயாரிப்பாளர்கள் யுஎஸ்பி 3.0 வை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வேர்டு 2010 ல் வாட்டர் மார்க் வசதியை பயன்படுத்துவது எப்படி?

கணினியை அதிகம் கையாளும் பலருக்கும் வேர்டு, எக்சல் உள்ளிட்டவற்றை கையாளுவது எளிதுதான். அடிப்படை கணினி கல்வியிலேயே இதன் பயன் பாடுகள் கற்றுத்தரப்பட்டாலும் கூட முழுமையாக அனைத்தையும் பயன்படுத்தும் அளவிற்கான தேவைகள் எழவில்லை.
வேர்டில் வாட்டர் மார்க் வசதியை பயன்படுத்துவது மிகவும் எளிதான ஒன்றுதான். இதற்கென வேர்டில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள டெம்ப்ளேட்டுகளை நீங்களே உரு வாக்கிக்கொள்ளவும் மடியும்.
இந்த வசதியை பயன்படுத்த நீங்கள் வழக்கம்போல் இன்சர்ட் மெனுவிற்கு செல்லக் கூடாது. வேர்டு 2010 ல் பேஜ் லேஅவுட் மெனுவில் இதற்கான வசதிகள் உள்ளன. பேஜ் லேஅவுட் மெனுவிற்கு சென்று வாட்டர்மார்க் என்பதை கிளிக் செய்தால் எண்ணற்ற வசதிகளைக் காணலாம்.
பொதுவாக அதிகம் பயன்படும் வாட்டர்மார்க்குகளான Confidential, DO NOT COPY, DRAFT, SAMPLE, ASAP மற்றும் URGENT ஆகியவைகள் முன்வடிவங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்று தேவைப்பட்டால் அதனை கிளிக் செய்தால் போதும். இது தவிர தனிப்பட்ட விதத்தில் வாட்டர் மார்க் தேவையுள்ளவர்கள் CUSTOM WATERMARK வசதியை பயன் படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.
இதிலும் எழுத்து வடிவிலான வாட்டர் மார்க் பயன்படுத்தலாம் , அல்லது ஏற்கனவே ஃபோட்டோஷாப் போன்ற அப்ளிகேஷன் மூலம் ஏதாவது படங்களை வாட்டர் மார்க்கிற்க்காக உருவாக்கியிருந்தாலும் அதனையும் பயன் படுத்திக் கொள்ளலாம். இது தவிர ஆபிஸ்.காம் இணைய தளத்தில் காணப்படும் பல வகையான வாட்டர் மார்க் முன்வடிவங்களில் ஏதாவதுதொன்றை பயன்படுத்த விரும்பினால் அதற்கான வசதியையும் கொடுக்கப்பட்டுள்ளது.

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

Air Assault 2

தரவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்.

ஸ்டார் டிபென்டர் star defender 4 PC Game


குட்டீஸ்களுக்காக கணினியில் பல விளையாட்டுகள் இருந்தாலும் விண்வெளி விளையாட்டுகள் என்றாலே சந்தோஷம் தான். அந்த வகையில் இந்த ஸ்டார் டிபென்டர் 4 விளையாட்டும். இதை இலவசமாக தறவிரக்கம் செய்து விளையாடுங்கள் குட்டீஸ். இந்த விளையாட்டை தறவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

உறையின் மீது விலாசத்தை அச்சிடலாம் envelope printing software

நாம் பலரும் பக்கம் பக்கமாக கதடிதங்களை அச்சடிக்கிறோம். ஆனால் கடிதத்தின் உறைமீது விலாசத்தை அச்சடிக்க மாட்டோம். கையால்தான் எழுதுவோம். வேர்டில் அதற்கான செட்டிங்ஸ் இருந்தாலும் நமக்கு பொறுமை இருப்பதில்லை. அந்த குறையைப் போக்க ஒரு சிறிய மென்பொருள் உள்ளது.
இதில் அனுப்புனர் விண்டோவில் உங்களது முகவரியையும் பெறுநர் விண்டோவில் யாருக்கு கடிதம் அனுப்புகிறோமோ அவர்களுடைய முகவரிகளையும் சேமித்து வைத்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் உறையின் மீது அச்சடித்துக்கொள்ளலாம். நமது உறையின் அளவுக்கேற்ப செட்டிங்ஸ் மாற்றிக்கொள்ளலாம். ஒரு எம்பிக்கும் மிக குறைவான இருக்கும் இந்த மென்பொருளை தறவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

அன்டெலிட் 360 UNDELETE 360


அன்டெலிட் மென்பொருளை பயன்படுத்தி கணினி, டிஜிட்டல் கேமரா, மெமரி கார்டுகள் மற்றும் பென்டிரைவ் போன்ற சாதனங்களிலில் இருந்து அழிந்துபோன பைல்களை மீட்டெக்கும். கணினி சேமிப்பகத்தை குறைவாக பயன்படுத்தி மிகவேகமாக செயல்படுகிறது. கணினியின் ஹார்டு டிஸ்க் மற்றும் பென்டிரைவுகள் ஃபார்மெட் ஆனாலும் மீட்டெடுக்கும் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசாகவே கிடைக்கிறது இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

சனி, 20 ஆகஸ்ட், 2011

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://greenutils.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

பைல் ரிப்பேர் File Repair

பைல் ரிப்பேர் மென்பொருள் பவர்புல் ரிப்பேர் மெனபொருள் டூல். உங்களது கணினியில் கரப்ட் ஆன கோப்புகளை ரிப்பேரிங் செய்து பயன் படுத்திக்கொள்ளலாம். கரப்ட்ஆன ரேர் பைல் மற்றும் அலுவலக பைல்களை இதன் மூலமாக சரிசெய்து பயன்படுத்தலாம்.

Word documents (.doc, .docx, .docm, .rtf)
Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
Zip or RAR archives (.zip, .rar)
videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
இமேஜ் JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
PDF documents (.pdf)
Access databases (.mdb, .mde, .accdb, .accde)
PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
music (.mp3, .wav)
இந்த பார்மெட்டுகளில் உள்ள கோப்புகளை சரிசெய்துகொள்ளமுடியும். இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

கம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் உழைக்க சில வழிகள்

கம்ப்யூட்டரில் சிக்கல் வருவதற்கு முன்பே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளின் மூலம் சிக்கல்கள் நேராதவாறு பராமரிக்கலாம்.

கம்ப்யூட்டர்களை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யுங்கள்
வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்வதால் ஹார்டு டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது

அப்டேட்களுடன் கூடிய ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள்
எந்த வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.
சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருள்களே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகின்றன.

ஃபயர்வால் இன்ஸ்டால் செய்யுங்கள்
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால், ஃபயர்வால் இயக்குவது மிகவும் அவசியம். அதிகாரப்பூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். .இந்த வசதியை, Start=> programs=> accessories=> Systemtools=> Security center சென்று இயக்கலாம்.
டீஃப்ராக் செய்யவும்
டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை ஒழுங்கமைக்கும் செயல்பாடு. அதாவது, நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் . இதனால் கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிப்பதோடு, தேவையற்றவை தவிர்க்கப்படும். நம் இயக்கத்துக்கு தகுந்தாற்போல் இந்த வசதியை இயக்கலாம்.

டிஸ்க்கை சுத்தம் செய்யுங்கள்
உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறனைத் துரிதப்படுத்த, டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் மீதங்களையும் இது முற்றிலும் நீக்கிவிடும்.

இணையதள டவுன்லோடுகளை குறையுங்கள்
இணையதளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். குறிப்பாக அதிகாரபூர்வமற்ற இசை இணைய தளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவற்றிலெல்லாம் கம்ப்யூட்டரை இயங்க விடாமல் செய்யும் திங்கிழைக்கும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.

பயன்படுத்தாத புரோகிராம் களை ரத்து செய்யுங்கள்
இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது, கன்ட்ரோல் பேனலில் உள்ள Add/remove programs பயன்படுத்தி அதனை நீக்கி விடுங்கள். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கம்ப்யூட்டரின் செயல்திறன் அதிகரிக்கும்.

கம்ப்யூட்டரை சுத்தம் செய்யுங்கள்
கம்ப்யூட்டரின் உட்பகுதிகளில் தூசு தங்கி விடாமல் இருக்க, வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசுகளை அகற்றுங்கள்.

நண்பர்களே இப்படி நீங்களும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் பயன்படும்

கணினி டிப்ஸ்

1. வெப் பேஸ்டு இமெயில்

வெப் பேஸ்டு இமெயில் என்பது ஒரு வெப் சர்வரில் உங்களுக்காக நீங்கள் அமைத்துக் கொண்ட இமெயில் வசதி ஆகும். இந்த இமெயில் கணக்கில் வரும் இமெயில்களை ஒரு வெப் பிரவுசர் துணையுடன் அந்த வெப் தளத்தில் நுழைந்து காண வேண்டும். அங்கிருந்தபடி தான் அவற்றைக் கையாள முடியும். கூகுள், விண்டோஸ் லைவ், யாஹூ ஆகியன இந்த வகையைச் சேர்ந்தவையே.

2. பைலை அழிக்க…

ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

3. தேடல் சுலபம்

இணையத் தேடலில் வெப்சைட் முகவரியை முழுவதுமாக டைப் செய்யத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக http://www.dinamalar.com/ என இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அட்ரஸ் பாரில் அடிக்க வேண்டுமா? முழுவதும் அடிக்க வேண்டாம். ஜஸ்ட் dinamaar என அடித்து கண்ட்ரோல் அழுத்தி என்டர் தட்டினால் போதும். முழு முகவரியினை எக்ஸ்புளோரர் தொகுப்பு உங்களுக்காக அமைத்திடும். இது .com என முடியும் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

4. டீ பக் டூல்

டீ பக்கிங் சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் இந்த சொல் அடிக்கடி பயன்படுகிறது. புரோகிராம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பிழைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கி செம்மைப் படுத்துவதனை இந்த சொல் குறிக்கிறது. இதனைக் கண்டறியவும் டீ பக் டூல் என அழைக்கப்படும் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன. இந்த டீ பக் டூல் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் கோட் வரிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் காட்டும்.

5. டூயல் பூட்

கம்ப்யூட்டர் ஒன்றை இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வழியாக பூட் செய்யும் திறனை இது குறிப்பிடுகிறது. லினக்ஸ் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில் பலரும் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து இயக்குவதனைக் காணலாம்.

6. மவுஸ் பாய்ண்ட்டர்

இதுதான் நீங்கள் மவுஸை நகர்த்துகையில் அங்கும் இங்கும் அலையும் பாய்ண்ட்டர். வழக்கமாக மேல் நோக்கி சிறிது சாய்வானதாக இருக்கும். இதனை மாற்றுவதற்கும் வசதிகள் உள்ளன. உரிக்கும் வாழைப்பழம், சிரிக்கும் முகம் என இந்த பாய்ண்ட்டரை மாற்றலாம். ஆனால் இவை அனிமேஷன் வகை என்பதால் ராம் மெமரி தேவையில்லாமல் காலியாகும். மேலும் அம்புக் குறியில் உள்ள தெளிவு, சுட்டிக் காட்டும் தன்மை இவற்றில் இருக்காது.

7. ஐ.எஸ்.ஓ., இமேஜ்….

ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்ப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால் ஐ.எஸ்.ஓ. இமேஜ் வேண்டுமா என உங்கள் சிடி பர்னிங் சாப்ட்வேர் கேட்கும்போது யெஸ் கொடுத்து அந்த பைலை உருவாக்கி அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்துப் பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

8. கேஷ் மெமரி

கேஷ் மெமரி: அடிக்கடி பயன்படுத்தும் டேட்டாவினைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் மெமரி வகையினை இது குறிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க முடிகிறது. இதனை இச்ஞிடஞு என ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

9. கரண்ட் பேஜ் பிரிண்ட்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து கிடைக்கும் விண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக் கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்துக் கொண்டு பின் Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.

10. ஷிப்ட் கீயின் பயன்பாடுகள்

சில செயல்பாடுகளை ஷிப்ட் கீயுடன் (Shift) மேற்கொண்டால் அது கூடுதல் பயன்களைத் தரும். எடுத்துக்காட்டாகப் பைல் மெனு கிளிக் செய்தால் வழக்கம்போல சில செயல்பாடுகளுக்கான கட்டங்கள் பட்டியலிடப்படும். ஆனால் ஷிப்ட் கீயுடன் அதனைக் கிளிக் செய்தால் Close All, Save All, and Paste Picture என்ற கூடுதல் பயன் பாட்டுக் கட்டங்கள் கிடைக்கும். சில டூல் பட்டன்கள் ஷிப்ட் கீயுடன் இணையும் போது அதன் செயல் பாடுகள் மாறுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டன் டபுள் அன்டர்லைன் கோடு தரும் பட்டனாக மாறும். Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

11. செல்லின் மதிப்பும் தோற்றமும்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள செல்களில் நாம் எண்களை இடுகிறோம். இதனால் அந்த செல்லில் ஒரு மதிப்பு அமைக்கப்படுகிறது. இந்த மதிப்பு மாறாது. எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 1234 என அமைத்தால் அந்த செல்லின் வேல்யு எப்போதும் 1234 தான். ஆனால் இதனை எக்ஸெல் நமக்குக் காட்டுகையில் 1,234 என்று காட்டலாம். அல்லது $1234 எனக் காட்டலாம். இது எப்படி அந்த செல் பார்மட்டை நாம் அமைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. ஆனால் இதன் வேல்யு எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

12. செல் செலக்ஷன்

அதிக எண்ணிக்கையில் செல்களை செலக்ட் செய்திட வேண்டுமா? நீங்கள் திட்டமிடும் Range முதல் செல்லை கிளிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் Edit மெனு சென்று Go To தேர்ந்தெடுங்கள். பின் Go To டயலாக் பாக்ஸில் உங்கள் ரேஞ்சில் எதிர்ப்புறமாக உள்ள கடைசி செல்லின் எண்ணை அமைத்துவிட்டு Shift அழுத்தியவாறே ஓகே கொடுங்கள். நீங்கள் செட் செய்திட விரும்பும் அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்.

13. எக்ஸெலில் குறிப்பிட்ட செல் செல்ல

உங்களுடைய ஒர்க் ஷீட் பெரிதாக இருந்து மானிட்டர் திரை அளவின் காரணமாக அனைத்து செல்களும் தெரிய வாய்ப்பில்லை. எனவே திரையில் காட்சி அளிக்காத ஒரு செல்லுக்குச் செல்ல என்ன செய்யலாம்? Edit மெனு சென்று அதில் Go To அழுத்தலாம். அல்லது F5 அழுத்தலாம்.

இப்போது Go To டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Reference என்ற சிறிய கட்டத்தில் செல்லின் அடையாள எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல்லுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செல்களை வரிசையாக Go To டயலாக் பாக்ஸ் நினைவில் வைத்திருக்கும். ஒரே செல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் Go To பாக்ஸில் அதன் மீது டபுள் கிளிக் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் அதனை டைப் செய்திட வேண்டியதில்லை.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

Bright Blue Stylish Cards Vector

AI (+TIFF Preview) | 13 Mb
தரவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்.

சிகிளீனர் புதிய தொகுப்பு CCLEANER 3.09

கம்ப்யூட்டர் இயக்கத்தின் போது உருவாக்கப்படுகின்ற தற்காலிக பைல்கள், ரெஜிஸ்டரியில் ஏற்படுத்தப்படும் வரிகள், நீக்கப்படும் பைல்கள், இணைய உலாவின் போது பிரவுசர்கள் தங்கள் வசதிக்கென உருவாகும் குக்கீஸ், பிரவுசிங் ஹிஸ்டரி பைல்கள் ஆகியவற்றை நீக்கப் பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம் ஆகும். இதனை Priform என்ற நிறுவனம் தயாரித்து இலவசமாக வழங்குகிறது.
பிரவுசர்களுக்கிடையேயான போட்டியில், பல பிரவுசர்கள் அடிக்கடி புதுப்பிக்கப் படுகின்றன. எனவே, அதன் பைல்களை நீக்கும் பணியில் ஈடுபடும் சிகிளீனர் புரோகிராமும் அவ்வபோது அப்டேட் செய்யபடுவது கட்டாயமாகிறது. அந்த வகையில் Priform நிறுவனம் தன் சிகிளீனர் புரோகிராமை அப்டேட் செய்து, புதிய வதிகளுடன், சிகிளீனர் பதிப்பு 3.09 ஐக்கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய புரோகிராம், பயர்பாக்ஸ் பிரவுசர் 6.0 க்கான சோதனைப் பதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. இதே முறையில் ரியல் பிளேயர், குரோம், இமேஜ் வீயூவர், நோட்பேடு, ஸ்டார்ட் அப் புரோகிராம்களை விருஙப்பப்படி தேர்ந்ததெடுத்தல், மெமரி நிர்வாகம் போன்ற பல பிரிவுகளில் அப்டேட் செய்யப்படுகிறது.
சிகிளீனரை வழக்கமாக பயன்படுத்தி வருபவர்கள் ஆப்ஷன் மெனுவில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து ஆட்டோமெட்டிக் அப்டேட் கொண்டு புதிப்பிக்களாம். புதியவர்கள் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

சனி, 13 ஆகஸ்ட், 2011

நகர பேருந்து City Bus


நீங்களும் பேருந்து ஓட்டுனராக விருப்பமுடையவரா உங்களுடைய விருப்பத்தை கணினியில் பூர்த்திசெய்து. பேருந்து ஓட்டி மகிழுங்கள். இந்த விளையாட்டை தரவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்.

Set of 3520 gradients for Photoshop

GRD | 7,45 Mb

தரவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்.



விசிட்டிங்கார்டு Business Card Vector – Gold on red


1 EPS | JPG preview | 6,5 Mb rar

தரவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்.

Modern Computer Equipment Vector


AI (+TIFF Preview) | 13 Mb

தரவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கணினியை பராமரிக்க எளிய வழிமுறைகள்

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.

கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.

நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.

சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது.

எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.

நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.

கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.

கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?

உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.

அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும்

அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.

Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.

இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது.

கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

கண்களை பாதுகாக்க மென்பொருள்

நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகி றோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப் பதை பலர் மறந்துவிடுகிறோம்.
அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந் திருப்பீர்கள்.

பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.

நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.

இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.

இதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windowsல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.

3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.

இது முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன. இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

கண்ணாடி இதயங்கள் Colorful Glass Hearts Vector

AI (+TIFF Preview) | 12 Mb

தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

http://www.unibytes.com/

Design Elements for Text


5 EPS | JPEG Preview | 15.34 MB

தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

http://www.filesonic.com/file/1608812654/Stock_Vector_Design_Elements_for_Text.rar

http://depositfiles.com/files/72nnfb4j9

கணினி பழதுநீக்கம் படங்கள் Computer Repair Service Vector

5 EPS | JPG Preview | 12.05 MB

தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

வெக்டார் இமேஜ் Orange Flower Banners

AI+TIFF | 14.36 Mb

தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

http://www.unibytes.com/WWaEjMff5F-B

போட்டோஷாப் லைட் யுனிட் PSD Templates for Photoshop – Light Unit


PSD | 2163×3031 | 350 dpi | 99 pcs | 532 Mb

தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

http://letitbit.net/download/8266.8b3c5f2281461f5e8f7de3894fbf/Light_Unit.rar.html

http://vip-file.com/downloadlib/724616198511670371-8266.8b3c5f2281461f5e8f7de3894fbf/Light_Unit.rar.html

போட்டோஷாப் டைமன் ஸ்டைல்ஸ் Diamonds photoshop styles

ASL, PSD | JPEG preview | 16,2 Mb

தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

http://www.unibytes.com/t5o-a95RaDcB

http://turbobit.net/z2h6em7czav3.html

புதன், 10 ஆகஸ்ட், 2011

ஜிமெயில் - சில புதிய வசதிகள்

கூகுள் எப்போதும் புதிய சில புரோகிராம் களைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமான தன் சாதனங்களில், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில், புதிய கூடுதல் வசதிகளையும் உருவாக்கும். அந்த வகையில், ஜிமெயில் பயன்பாட்டில் சில வசதிகளை நாம் இங்கு காணலாம்.
1. அக்கவுண்ட் லாக் ஆப் (Log Off): பொது கம்ப்யூட்டர் மையங்களில், நீங்கள் உங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி, உங்களுக்கு வந்த மின்னஞ்சல் கடிதங்களைப் படித்து பதில் எழுதுகிறீர்கள். உங்கள் நண்பர் அல்லது உறவினர் வீடுகளுக்கோ அலுவலகத் திற்கோ செல்கையில் இவ்வாறு உங்கள் கடிதங்களைக் கையாள்கிறீர்கள். ஆனால், செயல் முடித்து திரும்புகையில், அக் கவுண்ட்டில் இருந்து விலகாமல் அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுகிறீர்கள். Sign Off செய்திடாமல் விட்டுவிடுகிறீர்கள். அந்நிலையில் என்ன செய்திடலாம்?
வேறு எந்த ஒரு கம்ப்யூட்டரில் இருந்தும், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் பார்த்ததை Sign Off செய்திடலாம். இதற்கு மீண்டும் ஏதேனும் ஒரு கம்ப்யூட்டரில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டிற்குச் செல்லவும். அதில் உள்ள இன்பாக்ஸ் (Inbox) பார்க்கவும். அதன் கீழாக உங்கள் அக்கவுண்ட்டில் நீங்கள் எந்த நேரத்தில் இறுதியாக செக் செய்தீர்கள் எனக் காட்டப்படும். இங்கு “Details” என்பதில் கிளிக் செய்தால், செக் செய்த இடம், பிரவுசர், மொபைல் பிரவுசர், ஐ.பி. முகவரி ஆகிய தகவல்கள் காட்டப்படும். இதிலேயே நீங்கள் லாக் அவுட் செய்து, அக் கவுண்ட்டை மூடலாம்.
2. குழுவிலிருந்து விடுபட: ஏதேனும் ஒரு அஞ்சல் செய்தியில் தகவல் தரும் வகையில் பங்கு கொண்டால், பின்னர் அந்த அஞ்சல் குறித்து எழுதுபவர்களின் அனைத்து மெயில்களும் உங்களுக்கும் அனுப்பப்படும். உங்களுக்கு இதில் விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் அனுப்புபவர்கள் “Replies All” என்பதன் மூலம், அனைவருக்கும் அனுப்பும் வகை யில், அஞ்சலை அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால், “Smart Mute” என்னும் ஒரு வசதியைப் பயன்படுத்தலாம். இதனை ஒரு முறை பயன்படுத்திவிட்டால், நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை எங்கு பயன்படுத்தினாலும், மொபைல் பிரவுசரில் பயன்படுத்தினாலும், உங்களுக்கு அந்த தொடர் மெயில் அஞ்சல்கள் வராது.
3. விடுமுறையில் செல்ல: வெளியூருக்குச் செல்கிறீர்கள். உங்களால், குறிப்பிட்ட சில நாட்களுக்கு, ஜிமெயில் அக்கவுண்ட்டைப் பார்க்க முடியாது; அல்லது கவனம் செலுத்த முடியாது. இந்நிலையில் உங்களுக்கு மெயில் அனுப்பி தகவல்களை எதிர்பார்க்கும் மற்றவர்களுக்கு, தானாகப் பதில் அனுப்பும் வசதியை ஜிமெயில் கொண்டிருக்கிறது. இந்த வசதியின் பெயர் Vacation Responder. நீங்கள் இல்லாதபோது, இந்த வசதி, உங்களுக்கு வரும் மெயில் களுக்குத் தானாகவே செய்தியை அனுப்பி வைக்கும். இதனை இயக்க, “Mail Settings” என்ற பிரிவில் “எஞுணஞுணூச்டூ” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழ் பிரிவுகளில் “Vacation responder on.” என்று இருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்கள் விடுமுறை காலத்தில் அனுப்பப்படும் மெயிலுக்கான "சப்ஜெக்ட் லைன்' டெக்ஸ்ட்டை என்டர் செய்திடவும். பின்னர், மெசேஜ் டைப் செய்திட வேண்டும். அதன் பின்னர் "விடுமுறை காலத்தினை'யும் அமைக்கவும். பின்னர் “Save Changes” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
4. முன்னுரிமை மெயில்கள்: ஜிமெயில் மூலம் எக்கச்சக்க மெயில்கள் வருகிறதா? உங்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் மெயில்களை மட்டும் பிரித்துத் தனியே வைத்துப் படிக்க திட்டமிடுகிறீர்களா? அவ்வாறு முன்னுரிமை தர எண்ணும் மெயில்களை மட்டும் பிரித்து வைத்திட Priority Inbox என்னும் வசதியை ஜிமெயில் தருகிறது. தற்போது இது சோதனை நிலையில் தான் உள்ளது என்றாலும், நீங்கள் பயன்படுத்தலாம். முன்னுரிமை பெட்டியில் வைத்திட விரும்பும் மெயில்களை மஞ்சள் நிற (+) அடையாளத்தில் கிளிக் செய்திடவும். முக்கியமற்ற மெயில்களை வெள்ளை நிற (-) அடையாளத்தில் கிளிக் செய்திடவும். மெயில்கள் அலசப்பட்டு, முன்னுரிமை மெயில்கள் மட்டும் Priority Inboxல் வைக்கப்படும்.
5. குழு அஞ்சல்கள்: உங்கள் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பிட்ட நண்பர்கள் சிலர் என குழுவாக சில மெயில்களை அனுப்ப எண்ணுவீர்கள். ஒவ்வொரு முறையும், இவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அமைக்க வேண்டியதில்லை. இவர்களை ஒரு குழுவாக நீங்களே அமைத்து, அந்த குழுவினருக்கான பெயரை மட்டும் பெறுபவர் இடத்தில் என்டர் செய்து அஞ்சலை அனுப்பலாம். ஜிமெயில் ஹோம் பேஜில் Contacts என்பதில் கிளிக் செய்திடவும். இந்த பிரிவில் நீங்கள் யாரை எல்லாம் ஒரு குழுவாக அமைக்க விரும்புகிறீர்களோ, அவர்கள் பெயர்களுக்கு அடுத்து உள்ள சிறிய பாக்ஸில் கிளிக் செய்திடவும். பின்னர் Groups என்பதில் கிளிக் செய்து, “Create new” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு பெயரைக் கொடுக்கவும். இது இடது பக்கம் காணப்படும். எப்போது இந்த குழுவினருக்கு மெயில் ஒன்றை அனுப்ப வேண்டுமோ, அப்போது இதனைப் பயன்படுத்தலாம்.
6. பதிலியாக ஒருவர்: உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் மெயில்களை, உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரும் பார்க்கலாம் என நீங்கள் அனுமதிக்கலாம். இதற்கு Account Settings பேஜ் சென்று, பின்னர் அதில் “Accounts and Import” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்கள் நம்பிக்கைக் குரியவரின் ஜிமெயில் முகவரியைத் தரவும். ஜிமெயில் அவருக்கு மெயில் ஒன்றை உறுதிப்படுத்த அனுப்பும். அவர் அதனை ஒத்துக் கொண்ட பின்னர், உங்கள் இமெயில்களை அவர் படித்து, உங்களின் சார்பாக, பதில் அனுப்பவும் முடியும்.
7.டெஸ்க் டாப்பில் அறிவிப்பு: நீங்கள் அடிக்கடி கூகுள் சேட் பயன்படுத்துபவரா? ஜிமெயிலை அடிக்கடி செக் செய்திட விரும்புபவரா? அப்படியானால், உங்களுக்கு வந்திருக்கும் முக்கிய மெயில் குறித்து, சேட் விண்டோவில் உங்களை யாரேனும் அழைக்கும் போது, உங்கள் டெஸ்க்டாப்பில், உங்களுக்கு செய்தி கிடைக்கும். இந்த வசதி, நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால் மட்டுமே கிடைக்கும். இதனை இயக்க, Gmail Settings சென்று, Desktop Notifications என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு சேட் மெசேஜ் வந்தால் உங்களுக்குச் சொல்லப்பட வேண்டுமா? நீங்கள் Priority Inbox பயன்படுத்துபவராக இருந்தால், அதில் வரும் முக்கிய மெயில் குறித்து சொல்லப்பட வேண்டுமா? என்பது குறித்த ஆப்ஷன்களைத் தெரிவிக்கவும். அல்லது அனைத்து புதிய மெயில் வந்தவுடன், உங்களுக்கு அறிவிப்பு வேண்டுமா என்பதனைக் குறிக்கவும். பின்னர், அதற்கேற்ப அறிவிப்பினை டெஸ்க் டாப்பிற்கு ஜிமெயில் அனுப்பி வைக்கும்.
8. சேட் மெசேஜ் ஸ்டோரிங்: நீங்கள் எப்போது சேட் மெசேஜ் பயன்படுத்தினாலும், உங்கள் ஜிமெயில் சேட் ஹிஸ்டரியில், அவை சேவ் செய்யப்படும். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட சேட் தகவல் சேவ் செய்யப்பட வேண்டாம் என்று எண்ணினால், அதற்கு விலக்கு அளிக்கும் வகையில் செட் செய்திடலாம். சேட் விண்டோவின் மேலாக உள்ள, Actions என்னும் கீழ்விரி மெனுவினை விரிக்கவும். இதில் “Go off the record” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆனால், உங்களுடன் சேட் செய்பவர்கள், அவர்களின் சேட் ஹிஸ்டரியில் சேவ் செய்வதைத் தடுக்க முடியாது.

விண்டோஸ் இயங்குதளங்களுக்கு தமிழ் யுனிகோட்


உங்கள் விண்டோஸ் இயங்குதளங்களிலில் தமிழ் ஃபாண்ட் ஐ வைத்துக்கொள்ள விருப்பமாகஇருக்கிறதா? தமிழ் யுனிகோட் வைக்க இதை சொடுக்கவும்.

மொபைல் போன்களுக்கான இணையதளங்கள்

உங்கள் மொபைல் போன்களிலிருந்தே இணையத்திலிருந்து பாடல்கள் மற்றும் அப்ளிஷன்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய இதோ சில இணையதள
முகவரிகள்.

1. http://longmp3.com/

2. http://muthumobiles.net/

3. http://tamilmobilemovies.com/

இந்த இணையதள முகவரிகளை உங்கள் மொமைல்போன்களிலில் பயன் படுத்தி உங்களுக்கு பிடித்தமான வீடியோ பாடல்கள், காமெடிகள், எம்பி3 பாடல்களை இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.

ஃபாக்ஸ்டெப் கன்வெர்ட்டர் FoxTab Video to MP3 Converter

நாம் வைத்திருக்கும் வீடியோ பாடலை MP3 பாடலாக மாற்றி வைத்துக்கொள்ள பலருக்கும் ஆசைஇருந்தும் எப்படி செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கின்றனர். ஃபாக்ஸ்டேப் வீடியோ to எம்பி3 கன்வெர்ட்டர் இதன் மூலம் பல பார்மெட் பாடல்களையும் கர்வெர்ட் செய்திட முடியும் என்பது இதன் சிறப்பம்சம். Supported Format's (mpg, mp4, avi, wmv, mkv, flv) அதிவேகமாக கர்வெட்ர்ட் செய்யும் இந்த மென்பொருள் முற்றுலும் இலவம். Windows XP/Vista/7 இயங்குதளக்ளில் இயங்கக்கூடிய இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

என்னமோ ஏதோ... Ennamo Yeatho...


சாமிக்கிட்டச் சொல்லி... Samiketta cholli...

சனி, 6 ஆகஸ்ட், 2011

உலககோப்பை கிரிக்கெட் விளையாட்டு WORLD CUP 2011 PC Game

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்து பல மாதங்களாகியும் ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட்டின் மோகம் குறையவே இல்லை. உங்களுக்காகவே இதோ உங்கள் கணினியில் நீங்களே விளையாட...



ICC Cricket World Cup (2011)


ICC Cricket World Cup (2011)-
Changes-
Real player Names
Real Teams Kts
Real player Bats,gloves,pads,gaurds
Ipl 8 Teams with play Dlfa ipl tornaments
In this game player HD faces are reality
ipl latest update
stadium update
kit pack update


How to install:
this game is direct play on your computer
1.extract all cricket 2011 (first run this game after going on step 2)
2.double click on ipl rooster pack and select my documents/EA SPORTS(TM) Cricket 07
3.done & enjoy


System Requirements:
Operating system:2000/XP/Vista/7
Processor: 1.0GHz
Memory: 512 MB RAM
Hard Drive: 2 GB
Video Card: 128 MB
Sound Card:direct X 9.0c compatible
Direct X:9.0c


ICC Cricket World Cup (2011)

ICC Cricket World Cup (2011)


ICC


ICC Cricket World Cup (2011)


ICC

Cramit Single Link-

இங்கே சொடுக்கவும்
size: 920 mb


Mediafire Download Link-

இங்கே சொடுக்கவும்
size: 920 mb

Password-
world4free.in

Alternate link of the part V இங்கே சொடுக்கவும்
size : 166 mb

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நமது முகத்தையே கடவுச்சொல்லாக பயன்படுத்த.... Face Recognition

பொதுவாக கணினியில் நுழைய பயனாளர் பெயரும், கடவுச் சொல்லும் வழங்குவது தான் தற்போதைய நடைமுறை. இதற்குப் பதிலாக முகத்தை மட்டுமே காட்டி கணினிக்குள் எளிதாக நுழையலாம்.
இதற்கு முகம் ஏற்பு (Face Recognition) என்று பெயர். முகத்தை வைத்து பயனாளரை கண்டு பிடிப்பது இதன் அடிப்படை நாமும் நம்முடைய முகத்தை காட்டி நம்முடைய கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென் பொருள்கள் இருந்தாலும் அதிக மக்களின் பேராதரவோடு பிலிங்க் என்ற மென்பொருள் வெற்றி கண்டுள்ளது. இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இந்த மென்பொருளை நம்முடைய கணினியில் தரவிரக்கம் செய்து நிறுவிக்கொண்டு வெப்கேம் அல்லது மடிக் கணினியுடன் வரும் கேமிரா முன் நம்முடைய முகத்தை காட்ட வேண்டும், அவ்வளவுதான் இனி நம்முடைய கணினி நம்மை உள்ளே செல்ல அனுமதிக்கும். விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் ஏழு ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் திறனுடன் 32பிட், 64பிட் பதிப்பிலும் இது கிடைக்கின்றது. இந்த மென்பொருள் இயங்க 25 முதல் 30 எம்.பி வரை மட்டுமே தேவையாகும். இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

Image to PDF Converter

நாம் இணையத்தில் படங்களை ஒரு சில படங்களை அப்படியே சேர்த்து அனுப்புகிறோம். படங்கள் அதிகமானால் என்ன செய்வதென்று விழிபிதுங்கவேண்டாம். இதோ பல படங்களை ஒரே ப்பி.டி.எஃப் போப்பாக மாற்றிவிடமுடியும். இந்த மென்பொருளை ஒரு மாதம் இலவச சேவையில் பெறலாம். பணம் இருப்போர் விலைகொடுத்து எவ்வளவுநாள் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். இந்த மென்பொருளிலிருந்தே ஸ்கேனர் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் வாட்டர் மார்க், புக்மார்க் போன்ற வசதிகளும் உண்டு. 1.5 எம்.பி அளவுள்ள இந்த மென்பொருள் விண்டோசின் அனைத்து இயங்குதளங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தரவிரக்க இங்கே சொடுக்கவும்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

பாதுகாப்பான இணையதளத்தை அறிய வேண்டுமா?

குறிப்பாக எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும் இடத்தில் https:// என்று இருந்தால் அது பாதுகாப்பானது.இதன் உறுதியான, பாதுகாப்பான நிலையில் நம்பிக்கை வைத்து தகவல்களைத் தரலாம். இன்னொரு வழியும் உள்ளது. http://www.google.com/safebrowsing/diagnostic?site=“ ” என டைப் செய்து மேற்கோள் குறிகளுக்கிடையே அந்தக் குறியீடுகள் இல்லாமல் அந்த தளத்தின் முகவரி கொடுத்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் தரவும்.

அந்த தளம் குறித்த தகவல்கள், அதன் தன்மை குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த 60 அல்லது 90 நாட்களில் அந்த தளத்தினை கூகுள் நிறுவனம் சென்று வந்தது எனவும், எந்த வித கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்பினை அது பரவவிடவில்லை எனவும் சான்றிதழ் கிடைக்கும்.

மோசமான தளமாக இருந்தால் அதன் தன்மை குறித்து தகவல் இருக்கும்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

Panda Antivirus Pro 2012 Free for 6 months பான்டா ஆன்ட்டி வைரஸ் ஆறுமாதத்திற்கு இலவசம்

ஆன்ட்டி வைரஸ் வரிசையில் பான்டாவுக்கு தனி இடம் உண்டு. பான்டா நிறுவனம் இப்பொழு ஆறு மாதத்திற்கான ஆன்ட்டி வைரஸ் புரோ 2012 மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. இந்த மென்பொருளை தரவிறக்க உங்களிடம் ஃபேஸ்புக் கணக்கு இருந்தால் போதும். Facebook.com/PandaUSA.
ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் கவலைபட வேண்டாம் இதோ உங்களுக்கான நேரடி முகவரி தரவிரக்க இங்கே சொடுக்கவும்.

குழந்தைகள் எளிதாக தட்டச்சு பயில!

குழந்தைகளுக்கு விளையாட்டுடன் ஆங்கில தட்டச்சு கற்றுக் கொள்ள உதவிடும் இந்த சிறிய மென்பொருளை பற்றி,
இதில் Learn keyboard, Keyboard Practice. Character Drill, World Drill, Timed Drill என ஒவ்வொரு தலைப்பாக தோன்றும். அதில் எது உங்களுக்கு தேவையோ அதனை கிளிக் செய்யவும். முதலில் உள்ள Learn Keyboard ஐ கிளிக் செய்ய விண்டோ திறக்கும். Practice Drill கிளிக் செய்து உங்களுக்கு எந்த ரோ (Row) வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். நீங்கள் கை வைக்கும் அமைப்பினை மஞ்சள் நிறத்திலும் கை விரல்களை யும் மஞ்சள் நிறத்தில் காட்டும்.
விண்டோவில் எளிய ஆங்கில விளக்கம் உங்களுக்கு தெரியவரும். அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்ல அம்புகுறியை பயன்படுத்தவும். ஒவ்வொரு சொற்களுக்கும் Word Drill மூலம் நாம் எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம். நமது தட்டச்சு முறை சரியாக இருந்தால் அடுத்தடுத்த எழுத்துக்கு செல்லும். தவறாக இருந்தால் அங்கேயே நின்றுவிடும். இந்த சிறிய மென்பொருளை தரவிரக்க... இங்கே சொடுக்கவும்.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்